ராஜிவ் கொலை: திமுகவுடன் கூட்டணி ஏன்?- காங்கிரசுக்கு பாஜக மீண்டும் கேள்வி

Subscribe to Oneindia Tamil

டெல்லி & சென்னை:

ராஜீவ் காந்தி கொலையில் சம்பந்தம் உடையவர்கள் என்று திமுகவைக் குற்றம் சாட்டிய காங்கிரஸார் இப்போது அவர்களுடன்கூட்டணி சேர்ந்ததது ஏன் என்று பாஜக தலைவர் வெங்கைய்யா நாயுடு கேள்வி மீண்டும் எழுப்பியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

திமுகவின் மேல் மட்டத் தலைவர்களுக்கு ராஜீவ் காந்தியைக் கொலை செய்த விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்புஇருப்பதாக கடந்த 97ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி அன்றைய காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரி, குடியரசுத் தலைவர்கே.ஆர்.நாராயணுக்குக் கடிதம் எழுதினார்.

இதையடுத்து திமுக அங்கம் வகித்த ஐக்கிய முன்னணி அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை காங்கிரஸ் விலக்கிக் கொண்டது.இப்போது அதே காங்கிரஸார் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளார்கள். இதற்கான காரணத்தை அவர்கள் கூற வேண்டும்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் திமுக தலைவர்களுக்கு தொடர்பிருக்கிறது என்பதை நாங்கள் எப்போதும் கூறியதில்லை. அந்தக்குற்றச்சாட்டை நம்பவும் இல்லை.

காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்களாக இருந்த சரத்பவார், பி.ஏ.சங்மா, தாரிக் அன்வர் ஆகியோர் வெளிநாட்டவர் இந்தியப்பிரதமராக வருவதைத் தடை செய்யும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்குக்கடிதம் எழுதினார்கள்.

அதனையடுத்து காங்கிரஸ் உடைந்தது. இப்போது அவர்களுடன் கூட்டு வைத்துள்ளார் சோனியா காந்தி. சோனியாவெளிநாட்டவர் என்ற பிரச்சனையை முதலில் கிளப்பியது காங்கிரஸார்தான்.

இந்திரா காந்தியைச் சுட்டுக் கொன்றவர்களைக் காப்பாற்ற ராம்ஜெத்மலானி முயன்றார். அதனால் பாஜகவிலிருந்துவெளியேற்றப்பட்டார். இப்போது காங்கிரஸ் சார்பில் அவர் பிரதமர் வாஜ்பாய்க்கு எதிராக லக்னோ தொகுதியில்போட்டியிடுகிறார்.

இவையெல்லாம் உணர்வுப்பூர்வமான முக்கிய பிரச்சனைகளாகும். இதற்கெல்லாம் காங்கிரஸ் பதில் சொல்லியாக வேண்டும்என்றார் வெங்கைய்யா நாயுடு.

அப்போது, சரத்பவார், பி.ஏ.சங்மா, தாரிக் அன்வர் ஆகியோர் சோனியாவுக்கு எழுதிய கடிதத்தின் நகலை நிருபர்கள் முன்புவெளியிட்டார்.

பாண்டி, சிதம்பரத்தில் அத்வானி பிரச்சாரம்:

இதற்கிடையே, சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக பொதுச் செயலாளர் குமாரவேலு,

கூவம் நதியை சுத்தப்படுத்த மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தை ஏற்காமல் கிடப்பில் போட்டது முந்தைய திமுக அரசு.எனவே அந்தத் திட்டத்தை அதிமுக அரசு அமல்படுத்துகிறதா, இல்லையா என்ற கேள்வியை திமுக கேட்க தகுதியில்லை.

நெல்லை மாவட்டம் நான்குநேரியில் உயிர்த் தொழில் நுட்ப பூங்கா அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டதாக திமுககூறுகிறது. ஆனால் உண்மையில், திமுக அரசுதான் அந்தத் திட்டத்தை கைவிட்டுவிட்டது.

தமிழகத்தில் பிரசாரம் செய்ய அடுத்தமாதம் 7ம் தேதி துணைப்பிரதமர் அத்வானி வருகிறார். புதுவை மற்றும் சிதம்பரம்தொகுதிகளில் அவர் பிரசாரம் செய்வார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+