மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு எதிரான மனு தள்ளுபடி
சென்னை:
நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பெல்லார்மினுக்கு எதிராகசென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நாகர்கோவில் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் பெல்லார்மின், ஆறுமுகப் பெருமாள் என்பவரின் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இந் நிலையில் ஆறுமுகப் பெருமாளின் மனைவிசெல்லத்தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், எனது கணவர் ஆறுமுகப் பெருமாள் கடந்த 1995ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி கொலைசெய்யப்பட்டார். இது தொடர்பாக இரணியல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் 7 பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் கடைசி குற்றவாளியாகஅறிவிக்கப்பட்டுள்ளவர் பெல்லார்மின். தற்போது பெல்லார்மின் தேர்தலில் போட்டியிடவுள்ளதால், அவரை இந்தவழக்கிலிருந்து நீக்க போலீஸார் முயற்சிக்கிறார்கள்.
மேலும் வேண்டும் என்றே வழக்கையும் இழுத்துக் கொண்டு போகிறார்கள். கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வரும்வழக்கில், இதுவரை 2 முறை பெல்லார்மின் கைது செய்யப்பட்டார். ஆனால் ஒரு நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை. எனவே இந்த வழக்கு தொடர்பாக பெல்லார்மினைக் கைது செய்து நடவடிக்கை எடுக்கஉத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இது தொடர்பாக பெல்லார்மின் தாக்கல் செய்த பதில் மனுவில், மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடுவதைத்தடுக்கும் நோக்கத்துடன்தான் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து மனுவை வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் டிஸ்மிஸ் செய்ய நேரிடும் என்று நீதிபதிஅசோக் குமார் தெரிவித்தார். இதையடுத்து செல்லத்தாயின் வழக்கறிஞர் மனுவை வாபஸ் பெற்றார்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications