கருணா படையினர் மீது பயங்கர தாக்குதல்: மட்டக்களப்பை நோக்கி முன்னேறும் புலிகள்
கொழும்பு:
விடுதலைப் புலிகளுக்கும் கருணா தலைமையிலான படைக்கும் இடையே நேற்று நள்ளிரவில்பெரும் மோதல் வெடித்தது. புலிகள் படைகள் மட்டக்களப்பில் உள்ள வகரை நோக்கி முன்னேறிவருகின்றன. இதையடுத்து கருணாவின் படையைச் சேர்ந்த சுமார் 300 பேர் புலிகளிடம்சரணடைந்துள்ளனர். இதுவரை 8 பேர் வரை சண்டையில் உயிரிழந்துள்ளனர்.
நேற்று நள்ளிரவில் திருகோணமலைக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான வெருகல் ஆற்றின்அருகே போர் வெடித்தது.
வெருகல் ஆற்றின் திருகோணமலை கரைப் பகுதியில் ஆயிரம் புலிகள் நிறுத்தப்பட்டிருந்தனர். அதேபோல இன்னொரு கரை அமைந்துள்ள மட்டக்களப்புப் பகுதியில் கருணாவின் படையினர் சுமார்1,000 பேர் நிறுத்தப்பட்டிருந்தனர். இந்த இரு பிரிவினரும் மார்ட்டர்கள் மற்றும் துப்பாக்கிகளால்தாக்கிக் கொண்டனர்.
இதையடுத்து புலிகளின் கமாண்டோ படைகள் கருணாவின் கட்டுப்பாட்டுள் உள்ள பகுதிகளைநோக்கி முன்னேற ஆரம்பித்துள்ளன. கதிராவெலி என்ற இடத்தைக் கைப்பற்றிய புலிகளின் படைகள்இப்போது பாட்சேனை என்ற இடத்தில் நிலை கொண்டுள்ளன. இந்தப் படைகள் வகரை நோக்கிமுன்னேறி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
புலிகள் இயக்கத்தில் கருணா தலைமையில் பிளவு ஏற்பட்டதையடுத்து நடக்கும் முதல் மோதல்இதுவே. இதையடுத்து இலங்கை ராணுவம் உஷார் நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.
இரு தரப்பிலும் இதுவரை 8 பேர் வரை உயிரிழந்துள்ளதாகத் தெரிகிறது. கருணாவின் வகரைப்பகுதியின் கமாண்டர் ஜெயம் இந்தத் தாக்குதலில் காயமடைந்துள்ளார்.
இப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 300 இளைஞர்கள் புலிகளிடம்சரணடைந்துள்ளனர். இவர்கள் புலிகள் மீது தாக்குதல் ஏதும் நடத்தவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது. மேலும் கருணாவின் மார்ட்டர் தாக்குதல் பிரிவுப் படைகளில் சிலவும் புலிகளிடம்சரணடைந்துள்ளன.
இப் பகுதியில்ன் கமாண்டரும் கருணாவின் அண்ணனுமான சிவனேசதுரை என்ற ரெக்கிதப்பியோடிவிட்டதாகத் தெரிகிறது. தொடர்ந்து கடும் மோதல் நடந்து கொண்டுள்ளது.
தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள்ள புலிகள் படை நுழைந்துள்ளதை கருணாவின் செய்தித்தொடர்பாளர் வரதன் ஒப்புக் கொண்டுள்ளார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications