ரஜினி ரசிகர்களை அவமானப்படுத்திய பாண்டிச்சேரி அதிமுக
பாண்டிச்சேரி:
புதுவையில் நடந்த ஜெயலலிதாவின் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் ரஜினி ரசிகர்கள் அசிங்கப்படுத்தப்பட்டனர்.
பாண்டிச்சேரியில் பா.ம.க. போட்டியிடுவதால் அதை எதிர்த்துப் போட்டியிடும் பா.ஜ.கவை ஆதரிக்க ரஜினிரசிகர்கள் முடிவு செய்தனர். பா.ஜ.க. வேட்பாளர் லலிதா குமாரமங்கலத்துக்கு ஆதரவாக பிரச்சாரக் கூட்டத்தில் பேசஜெயலலிதா வருகிறார் என்றவுடன் அக் கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்க முடிவெடுத்தனர்.
ஆனால், தமிழகத்தில் ரசிகர்களை அதிமுக மதிக்காத காரணத்தால் ஜெயலலிதாவை புறக்கணிக்கலாம் என ஒருபிரிவு ரசிகர்கள் முடிவு செய்து, அதன்படி அதிமுக கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
ஆனால், இன்னொரு பிரிவினரோ நமது தலைவர் சத்ய நாராயண ராவ் உத்தரவிட்டுவிட்டா, இதனால் நாம்அதிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு தான் ஆக வேண்டும் என்று சொல்லிக் கொண்டு கிளம்பினர்.
ஆனால், ரஜினி ரசிகர்கள் பொதுக் கூட்டப் பகுதிக்குள் வரக் கூடாது என அதிமுக நிர்வாகிகள் திட்டவட்டமாகக்கூறி, அவர்களை அவமானப்படுத்தினர்.
அண்ணா திடலில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள ரஜினி ரசிகர்கள் கொடிகளுடன் கிளம்பினர். மாநிலரசிகர் மன்றத் தலைவர் ரஜினி சங்கரும் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி கோரி அதிமுக நிர்வாகிகளைஅணுகினார்.
ஆனால், அம்மா கூட்டத்தில் தயவு செய்து நீங்கள் கலந்து கொள்ள வேண்டாம். ஜெயலலிதாவை சந்திப்பதுஎல்லாம் சாத்தியமில்லை. உங்களுடன் பேசுவதையோ, உங்களை ஊக்குவிப்பதையோ அம்மா விரும்பவில்லைஎன்று அதிமுக புதுவை நிர்வாகிகள் முகத்தில் அடித்தார் போல கூறிவிட்டனர்.
இதனால் அவமானமாக உணர்ந்த ரஜினி ரசிகர்கள் திரும்பிச் சென்றனர்.
ஜெ. கூட்டத்தில் விதிமீறலா?
இதற்கிடையே பாண்டிச்சேரியில் நடந்த ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது தேர்தல் நடத்தைவிதிமீறல் நடந்ததாக எதிர்க் கட்சிகள் கூறி வரும் புகாரை மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் மறுத்துள்ளார்.
இக் கூட்டத்துக்குத் தந்த அனுமதியை பொதுப் பணித்துறை கடைசி நேரத்தில் ரத்து செய்தது. ஆனாலும்ஜெயலலிதாவின் கூட்டம் நடந்தது.
இந் நிலையில் அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், பொதுப் பணித்துறையின் அனுமதி பெற்ற பின்புதான்பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் பொதுப்பணித்துறையின் அனுமதி ரத்தான செய்திஎங்களை வந்து சேரவில்லை என்று கூறியுள்ளார் அவர்.
-
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications