புறப்பட்டது ஏ.சி.சண்முகம், சு.சுவாமி படை
சென்னை:
புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி ஆகியோர்சென்னையில் கூட்டாக தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினர்.
திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் ஒரு அணியும் தேர்தல் களத்தில் மல்லுக் கட்டிக்கொண்டுள்ளன. 3வது அணியாக விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் உள்ளடக்கிய கூட்டணியும் களத்தில்உள்ளது.
இவர்களுக்கு தாங்கள் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல புதிய நீதிக் கட்சியும், ஜனதாக் கட்சியும் 4வதுஅணியை அமைத்துள்ளன.
4வது அணியின் தேர்தல் பிரசாரம் சென்னையில் தொடங்கியது. சென்னை மெரீனா கடற்கரையோரம் உள்ளகுடிசை மாற்று வாரிய அலுவலகம் அருகே புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் மற்றும் ஜனதாக் கட்சித்தலைவர் சுப்ரமணியம் சுவாமி ஆகிய இருவரும் கூட்டாக பிரசாரத்தைத் தொடங்கினர்.
சொல்லிக் கொள்ளும்படி கூட்டம் இல்லையென்றாலும், ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் 100 பேருக்குகுறையாமல் தொண்டர்கள் திரண்டிருந்தனர். இந்த பிரசாரத் தொடக்கத்தின் போது புதிய நீதிக் கட்சி சார்பில்போட்டியிடும் 30 வேட்பாளர்களையும் (அவர்களே பாதிக் கூட்டமாக தெரிந்தனர்) ஏ.சி.சண்முகம் அறிமுகப்படுத்திவைத்தார்.
பின்னர் பிரசாரத்தைத் தொடங்கிய ஏ.சி.சண்முகம் பேசுகையில், திமுக, அதிமுக மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. மாற்றுக் கட்சியை மக்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாற்று சக்தியாக புதிய நீதிக் கட்சியும்,ஜனதாக் கட்சியும் விளங்கும்.
கொள்கை இல்லாத கூட்டணிதான் திமுக, அதிமுக அமைத்துள்ள கூட்டணிகள். தேர்தலுக்காக மட்டுமே அவர்கள்கூட்டணி சேருவார்கள். வெற்றி பெற்ற பின் கூட்டணியை மறந்து விட்டு பதவிக்காக அலைவார்கள். பதவியும்,ஆட்சியும்தான் அவர்களது ஒரே கொள்கை.
சட்டசபைத் தேர்தலில் இந்தக் கூட்டணிக்கு மாபெரும் வெற்றி கிடைக்க முன்னோட்டமாக இந்தத் தேர்தலில்எங்களது கூட்டணிக்கு வாக்களியுங்கள். எங்களால் திமுகவும், அதிமுகவும் 10 தொகுதிகளை இழந்தார்கள் என்றுவரலாறு கூறட்டும். முதலியார்களைப் புறக்கணிக்கும் திமுக, அதிமுக கூட்டணிக்கு தகுந்த பாடம் கற்பியுங்கள்என்றார் ஏ.சி.சண்முகம்.
பின்னர் இருவரும் வட சென்னை, தென் சென்னை பகுதிகளில் வாக்கு சேகரித்தனர்.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்!












Click it and Unblock the Notifications