ராசிபுரம் ராணியை மாற்றக் கோரி போராட்டம்: காங். தொண்டர்கள் அடிதடி
சென்னை:
ராசிபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வாசனின் ஆதரவாளரான ராணியை மாற்றக் கோரி சென்னைசத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை தமிழக காங்கிரஸ் தலைவர் வாசனின் ஆதரவாளர்கள் அடித்து விரட்டினர்.
ராசிபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக முதலில் எம்.எல்.ஏ. ஜெயக்குமாரின் பெயர் அடிபட்டது.
ஆனால், வாசன் தனது பவரை பயன்படுத்தி ராணிக்கு சீட் வாங்கித் தந்துவிட்டார்.
ராணிக்கு சீட் கொடுக்கப்பட்டதால் ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். இந் நிலையில் இன்று காலைஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தனர்.
அங்கு அவர்கள் வாசனுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராணியை மாற்றி விட்டு ஜெயக்குமாருக்கு சீட் கொடு என்றுகோஷமிட்டனர்.
வாசனுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய தட்டிகளையும் சத்தியமூர்த்தி பவனுக்குள் வைத்தனர். இதைப் பார்த்த வாசன்ஆதரவாளர்கள் கோபமடைந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அங்கிருந்து விரட்டி அடித்தனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் வாசன் விரைந்து வந்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைசமாதானப்படுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தொகுதிகளின் வேட்பாளர்கள் கட்சி மேலிடத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.அவர்களை என்னால் மாற்ற முடியாது. கட்சியினரின் உணர்வுகளை மேலிடத்திற்கு தெரிவிப்பது மட்டுமே எனது வேலை என்றார்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications