14 திமுக வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்த ஜெயலலிதா !!!
சிதம்பரம்:
பேரன் தயாநிதி மாறன் மட்டும் வெற்றி பெற்றால் போதும், மற்ற 14 திமுக வேட்பாளர்களும் எக்கேடாவது கெடட்டும் என்றுநினைத்து செயல்பட்டு வருகிறார் கருணாநிதி என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
சிதம்பரத்தில் பாஜக வேட்பாளர் தடா பெரியசாமிக்காக பிரச்சாரம் செய்த ஜெயலலிதா பொதுக் கூட்டத்தில் பேசுகையில்,
தனது பேேரன் தயாநிதி மாறன் மட்டும் ஜெயித்தால் போதும், மற்ற 14 திமுக வேட்பாளர்களும் தோற்றாலும் கவலையில்லைஎன்ற ரீதியில் செயல்பட்டு வருகிறார் கருணாநிதி. இதற்கு ஒரு சிறந்த ஆதாரம் உள்ளது.
திமுக சார்பில் தயாநிதி மாறன் உள்பட 15 பேர் போட்டியிடுகிறார்கள். ஆனால் பேரன் தயாநிதி மாறனுக்கு ஓட்டுப் போடுமாறுதனது கைப்பட எழுதப்பட்ட கடித அறிக்கையை மத்திய சென்னை தொகுதி முழுவதும் திமுக தொண்டர்கள் மூலம்வினியோகித்துள்ளார் கருணாநிதி.
தயாநிதி மாறன் மட்டுமே வெற்றி பெற வேண்டும், மற்ற 14 பேர் குறித்துக் கவலையில்லை என்று கருணாநிதி நினைப்பதையேஇந்தக் கடிதப் பிரசாரம் காட்டுகிறது.
தயாநிதி உள்ளிட்ட தனது குடும்பத்தினர் மீது மட்டுமே கருணாநிதிக்கு அக்கறை உள்ளது. மற்ற 14 திமுக வேட்பாளர்களையும்அவர் மாற்றந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறார் என்பதை திமுகவினர் உணர வேண்டும்.
ஆனால் நான் அப்படிஇல்லை. 33 அதிமுக வேட்பாளர்களும் எனக்கு ஒன்றுதான். அவர்கள் அனைவரையும் சமமரியாதையுடன்தான் பார்க்கிறேன். அவர்கள் அனைவருக்கும் சம அளவில் நேரம் ஒதுக்கி ஒரே குரலில்தான் பிரசாரம்செய்கிறேன். இரட்டைவேடம் போட எனக்குத் தெரியாது.
அதேபோல, பாஜக வேட்பாளர்களையும், அதிமுக வேட்பாளர்களுக்கு இணையாகத்தான் கருதுகிறேன். அதிமுகவேட்பாளர்களுக்கு கொடுக்கும் அதே மரியாதையைத்தான் பாஜக வேட்பாளர்களுக்கும் கொடுக்கிறேன். இதை திமுகவினர்உணர வேண்டும்.
கருணாநிதியிடம் இருப்பது குடும்பப் பாசம்தான். கட்சிப் பாசம் இல்லை என்றார் ஜெயலலிதா.
பின்னர் மயிலாடுதுறையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியனுக்கு ஆதரவாக ஜெயலலிதாபேசினார். அங்கு ஜெயலலிதாவின் பொதுக் கூட்டத்திற்கு பெரும் கூட்டம் கூடியது.
அப்போது காங்கிரஸ் வேட்பாளரும், சமீபத்தில் ஜெயலலிதாவைத் தட்டிக் கேட்டதால் அடி வாங்கியவருமான மணிசங்கர அய்யர்குறித்து ஒரு வார்த்தை கூட ஜெயலலிதா பேசவில்லை.
அவரைப் பற்றிப் பேசினால் அவர் அடிக்கப்பட்ட சம்பவம் மக்களுக்கு நினைவுக்கு வரும், இதனால் அவருக்கு அனுதாபம்ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் அதை தங்கள் தலைவி தவிர்த்ததாக அதிமுகவினர் கூறினர்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications