பொடா தீர்ப்பு: அத்வானி, ஜெ. பதவி விலக நெடுமாறன் கோரிக்கை
பாண்டிச்சேரி:
பொடா மறு ஆய்வுக் குழுவின் தீர்ப்பை மதித்து முதல்வர் ஜெயலலிதாவும், துணைப் பிரதமர் அத்வானியும் உடனடியாக தங்களதுபதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாண்டிச்சேரியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வைகோ உள்ளிட்டவர்கள் மீதான வழக்கில் பூர்வாங்க ஆதாரம்இல்லை என்று பொடா மறு ஆய்வுக் குழு கூறியுள்ளது. இதனால் வழக்கைப் போட்ட ஜெயலலிதா தனது பதவியை ராஜினாமாசெய்ய வேண்டும்.
பொடா சட்டம் கொண்டு வரப்பட்டபோது, அதை எந்த மாநில அரசாவது தவறாக பயன்படுத்தினால், மத்திய அரசு தட்டிக்கேட்கும் என்று அத்வானி நாடாளுமன்றத்தில் முழங்கினார்.
ஆனால் ஜெயலலிதா அரசு செய்த இந்த மாபெரும் தவறை தட்டிக் கேட்காமல் அமைதி காக்கிறார். இதனால் இப்போதையதீர்ப்பை மதித்து அவரும் பதவி விலக வேண்டும்.
பொடா மறு ஆய்வுக் குழுவின் தீர்ப்பை அடிப்படையாக வைத்து தமிழக அரசு மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால், அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம் என்றார் அவர்.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications