தொகாடியாவை தடுக்க கோவையில் குவிந்துள்ள கேரள போலீஸார்

Subscribe to Oneindia Tamil

கோவை:

விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா கோவை வழியாக கேரளாவுக்குள் நுழையலாம் என்ற சந்தேகத்தில் கோவைவிமான நிலையத்தில் கேரள போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்து ஐக்கிய வேதி என்ற அமைப்பு திருவனந்தபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் பிரவீன் தாாெகாடியாஉரையாற்றுவதாக அறிவித்திருந்தனர்.

பிரவீன் தொகாடியா வந்தால் வகுப்புக் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று வழக்குத் தொடரப்பட்டதால், திருவனந்தபுரம்மாவட்ட நீதிமன்றம் தொகாடியாவின் வருகைக்குத் தடை விதித்தது.

ஆனால் தடையை மீறி தொகாடியா கேரளாவுக்கு வரத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. கோவைக்கு விமானத்தில் வந்துஅங்கிருந்து கேரளாவுக்குள் அவர் நுழையலாம் என்று கருதப்படுவதால் கோவை விமான நிலையத்தில் கேரள போலீசார்குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே தமிழக போலீஸாரும் சாதாரண உடைகளில் விமான நிலையத்திலும், ரயில் நிலையத்திலும் கண்காணிப்பில்ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தமிழக போலீஸார், தொகாடியாவுக்கு எதிராக நாங்கள் எந்த நடவடிக்கை எடுக்காவிட்டாலும்,அவரின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+