ரசிகர்களின் உண்ணாவிரதம் திடீர் வாபஸ்
சென்னை:
சென்னையில் ரஜினி ரசிகர்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) குடும்பத்துடன் நடத்தத் திட்டமிட்டிருந்த உண்ணாவிரதப் போராட்டம்திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மதுரையில் ரஜினி ரசிகர்களை பாமகவினர் தாக்கியதைக் கண்டித்து மதுரை, சேலம் உள்ளிட்ட இடங்களில் ரஜினி ரசிகர்கள்உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் தலைநகர் சென்னையிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த ரசிகர்கள்முடிவு செய்திருந்தனர்.
மனைவி, குழந்தைகளுடன் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்களுக்கு மன்றத் தலைமைஉத்தரவிட்டுள்ளது. இதையடுத்து குடும்பத்துடன் போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக ரஜினி ரசிகர்கள் அறிவித்தனர்.
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்தப் போராட்டம் நடத்தப்பட இருந்தது.இந்தப் போராட்டத்திற்கு போலீசாரின் அனுமதியும் தரப்பட்டிருந்தது.
இந் நிலையில் இப் போராட்டம் திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக உண்ணாவிரதத்துக்கு ஏற்பாடு செய்திருந்தசினோரா அசோக் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உண்ணாவிரதம் இருந்தால் அது காவல்துறையினருக்கும் பொது மக்களுக்கும் இடையூறு எற்படுத்தும் என்பதால் அதை வாபஸ்பெறுமாறு ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார். இதனால் சென்னையில் நாளை குடும்பத்துடன் நடத்த இருந்த உண்ணாவிரதத்தைரத்து செய்துள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை திரும்பிவிட்ட ரஜினி நாளை பத்திரிக்கையாளர்களை சந்திக்கவுள்ள நிலையில் உண்ணாவிரதப் போராட்டம்தேவையில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆனால், ஒரு தரப்பு ரசிகர்கள் உண்ணாவிரதம் நடத்தியே தீருவது என்பதில் தீவிரமாக உள்ளனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications