மலேசியாவில் சிக்கியுள்ள 67 தமிழர்கள்: பிரதமருக்கு ஜெ. கடிதம்
சென்னை:
மலேசிய வேலைவாய்ப்பு நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டு, பாஸ்போர்ட், விசாக்களை பறி கொடுத்து விட்டுப்பரிதவிக்கும் 67 தமிழக இளைஞர்களைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் வாஜ்பாய்,வெளியுறவுத் துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்: மலேசியாவின் அந்தரேயா பகுதியில் உள்ள பிளக்ஸ்ட்ரானிக்ஸ் என்றநிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 67 இளைஞர்களிடம்தலா ரூ. 75,000 முதல் ரூ. 1 லட்சம் வரை பணம் வசூலித்துள்ளனர்.
இவர்களுக்கு மாதம் ரூ. 15,000 வரை சம்பளம் கிடைக்கும் எனவும் உறுதி கூறியுள்ளனர். ஆனால் மலேசியாசென்ற பின்னர் அவர்களை மிரட்டி, ரூ. 7000 சம்பளத்திற்கு வேலை செய்வதற்கு ஒப்புக் கொள்வதாக கூறிஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட வைத்துள்ளனர்.
மேலும், மலேசியா சென்ற பின்னர் தமிழக இளைஞர்களின் பாஸ்போர்ட்டுகள், விசாக்கள் உள்ளிட்டவற்றைமலேசிய வேலை வாய்ப்பு நிறுவனம் பறித்துக் கொண்டு விட்டு, அவர்களை அடிப்படை வசதிகள் கூட இல்லாதஇடத்தில் தங்க வைத்துள்ளது.
அவர்களை மீட்டு, அவர்களுக்குரிய அடிப்படை வசதிகள், உரிய சம்பளம் ஆகியவை கிடைக்க நடவடிக்கைஎடுக்க வேண்டும். மேலும் அவர்களை கூடிய விரைவில் தமிழகத்திற்குத் திருப்பி அனுப்பவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
போலியான வேலை வாய்ப்பு நிறுவனங்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுப்பதன் மூலம் இதுபோன்றசம்பவங்களை எதிர்காலத்தில் தவிர்க்க முடியும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications