வீரன் இளங்கோவன் நாடாளுமன்றம் செல்ல வேண்டும்: கருணாநிதி
கோபிச்செட்டிப்பாளையம்:
காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து கோபி பகுதியில் கருணாநிதி பிரச்சாரம் செய்தார். பின்னர் அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
கடந்த 10 நாட்களாக கிராமம், நகரம் என எல்லா பகுதிகளிலும் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறேன். போகும் இடமெல்லாம் சமுத்திரம் போல மக்கள் கூடுகிறார்கள்.
இங்கும் கடல் அலையென திரண்டிருக்கிறீர்கள். இங்கு கை சின்னத்துக்கு வாக்கு கேட்டு உங்கள் முன் நிற்கிறேன். இங்கே யாருக்கு நான் வாக்கு கேட்கிறேன் என்பது மிக முக்கியமானது.
பகுத்தறிவுப் பகலவன், நமக்கு தமிழ் சொல்லித் தந்த தந்தை பெரியாரின் பேரன் இளங்கோவனுக்கு வாக்கு கேட்டு நிற்கிறேன். பெரியாரின் இல்லத்தில் தவழ்ந்த இந்தப் பிள்ளை நாடாளுமன்றத்துக்கு சென்றாக வேண்டும்.
இளங்கோவனின் தந்தை ஈ.வி.கே. சம்பத்துக்கும் எனக்கு அரசியல் கருத்து வேறுபாடுகள் நிலவிய காலத்திலும் நட்பைப் பேணிக் காத்த பண்பாளர் அவர். நாடாளுமன்றத்தில் தமிழக மக்களுக்காக கனமாக குரல் தந்தவர் சம்பத்.
அண்ணாவின் சார்பாக நேருவிடம் பேசி இந்தி பேசாத மக்கள் மீது இந்தி திணிக்கப்படாது என்ற உறுதிமொழியைப் பெற்றுத் தந்தவர் சம்பத் தான். அந்த வீரனின் பிள்ளை இளங்கோவனும் வீரனே. துணிச்சலாய் ஜெயலலிதாவின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்க்கும் வீரன்.
இந்தக் கூட்டணியில் இல்லாமல் போயிருந்தாலும் கூட இளங்கோவனை தூரத்தில் இருந்தாவது வாழ்த்தியிருப்பேன் என்றார் கருணாநிதி.
துரைமுருகன் பேச்சு:
திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: 40 தொகுதிகளில் ஜெயலலிதாவுக்கு எரிச்சல் ஊட்டக் கூடிய தொகுதி என்றால் அது கோபிச்செட்டிப்பாளையம் தான். 39லும் தோற்றாலும் பரவாயில்லை. இங்கு போட்டியிடும் இளங்கோவனை எப்படியாவது தோற்கடிக்கச் செய்ய வேண்டும் என்று சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவை அந்த அளவுக்கு தன் பேச்சுக்களால் டச் செய்துவிட்டார் இளங்கோவன். ஜெயித்து எம்.பியான பின் ஜெயலலிதாவைப் பார்த்து ஹலோ ஜெயா என்பார் இளங்கோவன்.
ஊழல் செய்து ஊர் பணத்தை கொள்ளையடித்து வளர்ப்பு மகனுக்கு ரூ. 100 கோடியில் கல்யாணம் செய்த ஜெயலலிதாவை வீட்டுக்கு அனுப்பினார்கள் மக்கள். அதே நேரத்தில் திமுக அரசு சாதனைகள் செய்தும் கூட வீட்டுக்கு அனுப்பினீர்கள்.
இந்த முறை ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்ட இளங்கோவனை வெல்லச் செய்யுங்கள் என்றார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications