ரஜினி குழப்புறாரே: திருமாவளவன்
பாண்டிச்சேரி:
பாஜகவை ஆதரிக்கும் ரஜினி முடிவு தெளிவானது அல்ல என்று விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் பொதுச்செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.
திருமாவளவன் புதுவை மக்களவைத் தொகுதி விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் சோழன் நம்பியாருக்குஆதரவாக பிரசாரம் செய்தார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நடிகர் ரஜினிகாந்த் பாமகவை எதிர்க்கிறாரா? அல்லது பாஜகவை ஆதரிக்கிறாரா என்று புரியவில்லை. அவரதுமுடிவு தெளிவாக இல்லை.
பாமகவை எதிர்ப்பதாக இருந்தால் எந்த கட்சிக்கும் அவரது ரசிகர்கள் ஓட்டு போடலாம். ஆனால் பாமகவைதோற்கடிக்க அவர் விரும்பினால் பாமகவுக்கு இணையாக வாக்கு வங்கி உள்ள கட்சியை அவர் ஆதரிக்கவேண்டும்.
விடுதலை சிறுத்தைகள் அமைப்புதான் கூட்டணி கட்சிகளோடு இணைந்து பாமகவுக்கு இணையான பலத்துடன்போட்டியிடுகிறது. எனவே மக்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு தான் ரஜினி ஆதரவு அளித்திருக்க வேண்டும்.
ஆனால் வாக்கு வங்கியே இல்லாத பாஜகவுக்கு ரஜினி ஆதரவளித்து இருக்கிறார். ரஜினிக்கு அவப்பெயரைத்தேடித் தரும் வகையில் சிலர் அவருக்கு ஆலோசனை கூறியிருக்கிறார்கள்.
மக்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு நான் சென்ற இடமெல்லாம் நல்ல வரவேற்பு இருக்கிறது. பாதுகாப்புத் துறைஅமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் எங்கள் அணியில் இருப்பதால் நாங்கள் மறைமுகமாக பாஜகவை ஆதரிப்பதாககாங்கிரஸ் கூறுகிறது. பெர்னாண்டஸ் எங்களை கட்டுப்படுத்தமாட்டார். அதேபோல் பாஜகவாலும்பெர்னாண்டசைக் கட்டுப்படுத்த முடியாது என்று கூறினார்.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித்












Click it and Unblock the Notifications