வீரப்பன் கூட்டாளிகளின் மரண தண்டனை ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

பெல்ஹாம்:

தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி, வீரப்பன் கூட்டாளிகள் அனுப்பிய கருணை மனுதொடர்பாக இது வரை தனது முடிவை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அறிவிக்காததால் அவர்களது மரணதண்டனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

1993ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பாலாறு அருகே நடந்த கண்ணிவெடி தாக்குதலில் கர்நாடக போலீஸார் உள்பட21 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக வீரப்பன் கூட்டாளிகள் சைமன், ஞானபிரகாஷ், மாதய்யா,பிலேந்திரா ஆகியோர் பிடிபட்டனர். இவர்களுக்கு மைசூர் தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.

இதை எதிர்த்து 4 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் 4பேரின் ஆயுள் தண்டனையை தூக்கு தண்டனையாக மாற்றி தீர்ப்பளித்தது. இதனையடுத்து, இவர்களை வரும் 16ம்தேதி பெல்காம் மத்திய சிறையில் தூக்கிலிட மைசூர் மாவட்ட நீதிபதி ஹெக்டே உத்தரவு பிறப்பித்தார்.

இந் நிலையில், 4 பேரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினர். அந்த மனு தொடர்பாக கலாம் இதுவரை தனது முடிவை அளிக்காததால், 4 பேரையும் தூக்கிலிடுவது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பெல்ஹாம் சிறைக்கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு கூறினார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

கருணை மனுவை கலாம் நிராகரித்தாலும் கூட தூக்குத் தண்டனையை நிறைவேற்ற மேலும் இரு வார காலமாகும்.கலாமின் உத்தரவு கிடைக்கப் பெறுவது உள்ளிட்ட நடைமுறை வழக்கங்களுக்குப் பின்பே தண்டனைநிறைவேற்றப்படும்.

சிறையில் வீரப்பன் கூட்டாளிகள் நால்வரும், தாங்கள் நிரபாரதிகள் என்றும் போலீஸ் பொய் வழக்குபோட்டுள்ளதாகவும் கூறி வருகின்றனர். நேரம் தவறாமல் சாப்பிடுகின்றனர். ஒரு நாளுக்கு இருமுறை மருத்துவர்அவர்களை பரிசோதிக்கிறார். நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர். கிறிஸ்தவ பாதிரியார் சிறைக்கு வந்துஅவர்களுடன் பிரார்த்தனை செய்கிறார்.

பிவிலேந்திரா, ஞானபிரகாஷ்வை அவர்களது மனைவிகள் ஒரு முறை சிறையில் வந்து பார்த்தனர். அவர்களின்உறவினர்கள் யாரும் இதுவரை, தண்டனைக்குப் பின் உடலை தங்கள் வசம் ஒப்படைக்கும்படி கோரவில்லைஎன்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+