ராமதாசுக்கு கறுப்பு கொடி காட்டிய ரஜினி ரசிகர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரையில் பாமக நிறுவனர் ராமதாசுக்கு கறுப்புக் கொடி காட்டிய ரஜினி ரசிகர்களில் நான்கு பேரை போலீஸார்கைது செய்துள்ளனர். அதிமுக-பாஜக கூட்டணிக்கு ரஜினி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இந்தக்கைது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2ம் தேதி மதுரை நெல்பேட்டை அண்ணாசிலை அருகே ராமதாஸ் காரை மறித்து ரஜினி ரசிகர்கள் கறுப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் கடுப்பான பாமக தொண்டர்கள் ரஜினி ரசிகர்களைத் தாக்கினர்.

சரமாரியாகத் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த ரஜினி ரசிகர்கள் விளக்குத்தூண் போலீஸில் புகார் கொடுத்தனர்.அதன் அடிப்படையில் ராமதாஸ் உள்ளிட்ட 26 பேர் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ்வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து பாமகவினர் 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இந் நிலையில், கறுப்புக் கொடி காட்டிய ரஜினி ரசிகர்கள் மணவாளன், ரஜினி வைரம், முரளி பாட்ஷா, சாகுல் ஹமீதுஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+