கோவாவில் கொலை செய்துவிட்டுத் தப்பிய கோவை இளைஞர்கள் சிக்கினர்
கோயம்புத்தூர்:
கோவாவில் கார் டிரைவரைக் கடத்தி, அவரை பீர் பாட்டில்களால் அடித்தும், குத்தியும் கொலைசெய்த மூன்று கோவை வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சில நாட்களுக்கு முன் கோவை மாநகர போலீசார் வழக்கமான வாகன சோதனையில்ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரே பைக்கில் வந்த சேகர் (30), பிரதீபன் (23), அப்துல் சமத் (22)ஆகிய மூன்று பேர் பிடிபட்டனர்.
இவர்கள் வந்த பைக் திருடப்பட்ட ஒன்று என்று விசாரணையில் தெரிந்தது. இதையடுத்துஇவர்களை கவனிக்க வேண்டிய விதத்தில் போலீசார் கவனித்தபோது பொலபொலவென பலதகவல்களைக் கொட்டினர்.
கோவாவுக்கு சமீபத்தில் டூர் சென்ற இவர்கள் அங்கு டாடா சுமோ காரை வாடகைக்கு எடுத்ததையும்,அந்த டிரைவரைக் கொலை செய்துவிட்டு காரை கடத்தி வந்ததையும் சொல்லி போலீசாரையே அதிரவைத்துள்ளனர்.
கோவாவில் போண்ட்டாஎன்ற பகுதியில் உள்ள டிராவல்சில் டாடா சுமோவை வாடகைக்கு எடுத்தஇவர்கள், அதில் போன்லா என்ற வனப் பகுதிக்குச் சென்றனர். வாகனத்தை பாம்கின் சர்க்கார் என்றடிரைவர் ஓட்டியுள்ளார்.
வனப் பகுதியில் வைத்து நன்றாக குடித்த இவர்கள், பின்னர் பீர் பாட்டில்களாலேயே சர்க்காரைஅடித்துக் கொன்றுள்ளனர். பாட்டிலை உடைத்துக் குத்தியுள்ளனர். கழுத்தையும் அறுத்து பிணத்தைகாட்டிலேயே போட்டுவிட்டு டாடா சுமோவைக் கடத்திக் கொண்டு கோவைக்கு வந்தனர்.
வரும் வழியிலேயே காரை விற்க முயன்றுள்ளனர். ஆனால், இவர்கள் மீது சந்தேகமடைந்த யாரும்அதை வாங்க முன் வரவில்லை. இதையடுத்து போத்தனூர் பகுதியில் சுமோவை ரோட்டிலேயேஓரம்கட்டிவிட்டு வீடுகளுக்குச் சென்றுவிட்டனர்.
இந்த சுமோவைக் கைப்பற்றிய போத்தனூர் போலீசார் கோவா போலீசாரைத் தொடர்புகொண்டபோது, டிரைவரின் கொலை குறித்தும், கார் கடத்திச் செல்லப்பட்டது குறித்தும்தெரியவந்தது.
மேலும் கடத்திய இளைஞர்கள் குறித்து டிராவல்ஸ் உரிமையாளர் தந்த விவரங்களையும் கோவைபோலீசாரிடம் கோவா போலீசார் வழங்கினர்.
இந் நிலையில் தாங்களாவே வந்து போலீசாரிடம் சிக்கிய மூவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டுவிடகோவா போலீசாருக்குத் போத்தனூர் போலீசார் தகவல் தந்தனர். இதையடுத்து கோவா போலீஸ்படை கோவைக்கு வந்தது. குற்றவாளிகள் இவர்கள் தான் என்பதை உறுதி செய்தது.
இதைத் தொடர்ந்து மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications