ஜெ.வுக்கு விளம்பரம்: அரசு டாக்டர் சஸ்பெண்ட் !
வேலூர்:
தேர்தல் பிரச்சாரத்துக்கு அரக்கோணம் வந்த முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்று பத்திரிக்கைகளில்விளம்பரம் தந்த அரசு டாக்டர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
அரக்கோணம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் பன்னீர்செல்வம், கடந்த 1ம் தேதிஜெயலலிதா பிரச்சாரத்துக்கு வந்தபோது அவரை வரவேற்று தினமணியில் விளம்பரம் தந்தார்.
அரசு ஊழியராக இருந்து கொண்டு விளம்பரம் தந்ததன் மூலம் அவர் தேர்தல் விதியை மீறிவிட்டதாகதேர்தல் ஆணையத்திடம் திமுக புகார் கொடுத்தது. இதையடுத்து இது குறித்து விசாரிக்க மாவட்டகலெக்டர் மோகன்தாசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
விசாரணையில், பன்னீர்செல்வம் விளம்பரம் தந்தது உறுதியானது.
இதையடுத்து அவரை அரசு மருத்துவர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்து வேலூர் மாவட்டமருத்துவத்துறை இணை இயக்குனர் டாக்டர் கலீமுல்லா மூலமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் விதியை மீறியதாக அரசு ஊழியர் ஒருவர் மீது தமிழ்நாட்டில் இப்போது தான்முதன்முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் கமிஷனின் கண்டிப்பால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது தமிழக அரசு.












Click it and Unblock the Notifications