அதிமுக-பா.ஜ.க மீது மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள்: ஜ.மு.கூ.
சென்னை:
அதிமுக மீதும் பா.ஜ.க மீதும் மக்களிடையே வெறுப்பு பரவிக் கிடக்கிறது என திமுக தலைமையில்இன்று நடந்த ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் கட்சித் தலைவர்கள் கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில்அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. கூட்டத்தில் ரஜினி விவகாரம் குறித்தும், பிற தேர்தல் பணிகள் குறித்தும்விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக அனைத்துக் கட்சித் தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்தனர்.பிரச்சாரத்தில் ஏற்பட்ட தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
இதையடுத்து அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை விவரம்,
பா.ஜ.க. அரசின் குழப்பமான அரசியலையும், செயல்களையும், மறைமுகத் திட்டங்களையும் உணர்ந்து மக்கள்வெறுப்படைந்து போயுள்ளனர். தமிழ்நாட்டில் அடக்குமுறை ஆட்சி நடத்தி வரும் ஜெயலலிதாவின் மீது மக்களின்வெறுப்பு உச்ச கட்டத்தில் உள்ளது.
ஜனநாயக முற்போக்குக் கூட்டணியை வெற்றிப் பெறச் செய்தால் மட்டுமே தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியும்என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டதை பிரச்சாரத்தின்போது தெள்ளத் தெளிவாகவே உணர்ந்து கொள்ள முடிந்தது.மேலும் மதவாதத்தையும், மத சண்டைகளையும் தமிழக மக்கள் அடியோடு வெறுக்கிறார்கள்.
மத நல்லிணக்கத்துக்கு எந்த வகையில் ஆபத்து வந்தாலும் அதை ஏற்க தமிழர்கள் தயாராக இல்லை.
குஜராத் வன்முறை, கொலை வழக்குகளில் தொடர்புடையவர்களைக் காப்பாற்ற அம் மாநில பா.ஜ.க. அரசுமுயன்றதால் அந்த வழக்குகளை மகாராஷ்டிர மாநிலத்துக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதையும்,லக்னெளவில் பிரதமர் வாஜ்பாய்க்கு ஓட்டு வேட்டையாட இலவச சேலை வழங்குவதாகக் கூறி 22 ஏழைப்பெண்களின் உயிர் போக காரணமாக இருந்த பாஜகவினரின் செயல்களையும் கண்டு தமிழக மக்கள் எரிச்சலும்கோபமும் அடைந்துள்ளனர்.
பா.ஜ.கவுக்கு எந்த விதத்திலும் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்றரீதியில் ஜெயலலிதாவின் ஆட்சி நடந்துகொண்டுள்ளது. அடக்குமுறை, குழப்பம் விளைவித்து ஆதாயம் தேடுவது என அதிமுக அரசின் கொள்கைகளைமக்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.
மக்களுக்கு ஏற்படும் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வைத் தேடி தர ஜனநாயக முற்போக்குக் கூட்டணி உறுதிஏற்கிறது. மக்களுக்காக ஜெயலலிதாவின் எந்த விதமான கொடுமைகளையும் சந்திப்போம்.
தனக்கு ஓட்டு கிடைக்காது என்பதால் மக்கள் பிரச்சனைகளை திசை திருப்ப எதிர்க் கட்சியினரை அடக்கி ஒடுக்குதல்,பொய் வழக்கு போடுதல் போன்ற செயல்களில் ஜெயலலிதா ஈடுபடலாம்.
ஆனால், அதைக் கண்டு கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் கோபமடைந்து எந்தச் செயலையும் செய்யக் கூடாது.
அமைதியாய் பிரச்சாரத்தில் ஈடுபடுங்கள், ஜெயலலிதாவை தோல்வி விரட்டி வந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications