பா.ம.கவினர் மோதலில் ஈடுபட மாட்டார்கள்: கருணாநிதி
சென்னை:
அதிமு, பாஜக கட்சிகளின் தேர்தல் விதி மீறல்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் பலமுறை புகார் கூறிவிட்டோம். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியவில்லைஎன்று திமுக தலைவர் கருணாநிதி விரக்தியுடன் கூறியுள்ளார்.
ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் கட்சித் தலைவர்கள் கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில்அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. கூட்டத்திற்குப் பிறகு கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கூட்டத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் சாதக, பாதங்களை ஆராய்ந்தோம். பாதகங்களைக் களையதிட்டங்கள் தீட்டினோம்.
அரசியல் கட்சித் தலைவர்களை தனிப்பட்ட முறையில் ஜெயலலிதா தாக்கிப் பேசுகிறார். குறிப்பாக காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி குறித்து அவதூறாகவும், விஷமத்தனமாகவும் அவர் பேசி வருகிறார். இதேபோல பாஜகதலைவர்களும் சோனியா குறித்தும் பிற தலைவர்கள் குறித்தும் தனிப்பட்ட முறையில் அவதூறாக விமர்சனம் செய்துவருகிறார்கள். இவை அப்பட்டமான தேர்தல் விதிமீறல்களாகும்.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி தனிப்பட்ட முறையில்விமர்சனம் செய்வதைக் கண்டிக்கும் உரிமை ஆணையத்திற்கு உள்ளது. ஆனால் பலமுறை புகார் கொடுத்தும்தேர்தல் ஆணையம் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. இதற்கு மேல் என்ன செய்வதென்றுதெரியவில்லை.
மே மாதம் முதல் வாரத்தில் சோனியா காந்தி தமிழகம் வருகிறார். சென்னையில் அவர் பிரச்சாரம் செய்வார். அவரதுகூட்டத்தில் கூட்டணித் தலைவர்கள் பங்கேற்பர் என்றார். ரஜினி குறித்த கேள்விகளுக்கு அவர் பதில் தரமறுத்துவிட்டார்.
அதன் விவரம்:
நிருபர்: ரஜினி பா.ஜ.கவுக்கு ஆதரவு தந்துள்ளதால் உங்கள் கூட்டணி வெற்றி பாதிக்காதா?
கருணாநிதி: இந்த கேள்விக்கு பதில் இல்லை
நிருபர்: ரஜினி குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதித்தீர்களா?
கருணாநிதி: இல்லை
நிருபர்: மதுரையில் ரஜினி ரசிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்களே?
கருணாநிதி: வேறு ஏதாவது பேசுங்கள்
நிருபர்: உங்கள் கூட்டணிக் கட்சியினர் யாருமே ரஜினி பற்றி பேசுவதில்லையே?
கருணாநிதி: அவர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். அதைப் பற்றி ஏன் பேச வேண்டும்
நிருபர்: பிரச்சாரத்தின்போது பா.ம.க-ரஜினி ரசிகர்கள் மோதல் ஏற்பட்டால்?
கருணாநிதி: அப்படி மோதல் ஏதும் வராது. பா.ம.கவினர் அப்படி செய்ய மாட்டார்கள். பிரச்சாரத்தில் எந்தவன்முறைக்கும் இடம் தரக் கூடாது என்று கூட்டணிக் கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிருபர்: திமுகவினர் கள்ள ஓட்டு போடுவார்கள் என்று அமைச்சர் பொன்னையன் கூறியிருக்கிறாரே?
கருணாநிதி: பொன்னையன் எங்களுக்காக ஓட்டு போட நாங்கள் விட மாட்டோம்.
இவ்வாறு பேட்டி நடந்தது.
கருணாநிதி- சுர்ஜித் கூட்டுப் பிரசாரம்:
இந் நிலையில் மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலாளர் ஹகிஷன் சிங்சுர்ஜித்துடன் கருணாநிதி கூட்டாகப் பிரசாரம் செய்யவுள்ளார்.
தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் செயலாளர் வரதராஜன் விடுத்துள்ள அறிக்கையில், வரும் மே 1ம் தேதிமதுரை தமுக்கம் மைதானத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம்நடைபெறவுள்ளது.
அதில் திமுக தலைவர் கருணாநிதியும், ஹகிஷன் சிங் சுர்ஜித்தும் கலந்து கொண்டு பேசுவர், மதுரை நாடாளுமன்றத்தொகுதியின் மார்க்சிஸ்ட் வேட்பாளர் மோகனுக்கு ஆதரவாக கூட்டுப் பிரசாரம் செய்வர் என்று தெரிவித்துள்ளார்.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications