வலம்புரி ஜான் திவால்!
சென்னை:
பல கட்சிகள் கண்டவரும், இலக்கியவாதியும், இந்த நாள் இனிய நாள் மூலம் மிகப்பிரபலமானவருமான வலம்புரிஜானும் அவரது மனைவி பானுவும் பொருளாதாரரீதியில் திவால்ஆனவர்கள் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அதிமுக, காங்கிரஸ், திமுக என பல கட்சிகளுக்குத் தாவியவர் வலம்புரி ஜான். சமீப காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசியல், எழுத்துப்பணி என அனைத்திலிருந்தும் ஒதுங்கி இருக்கிறார்.
ஜானும் அவரது மனைவி பானுவும் அர்ஜூன் தாஸ் என்பவரிடம் ரூ. 12.28 லட்சம் கடன்வாங்கியிருந்தார். இதைத் திருப்பித் தராததால் வலம்புரி ஜான், பானு ஆகியோர் மீது வழக்குத்தொடர்ந்தார் அர்ஜூன் தாஸ்.
இதையடுத்து பணத்தைத் திருப்பித் தருமாறு வலம்புரி ஜானுக்கும் பானுவுக்கும் நீதிமன்றம்உத்தரவிட்டது. அப்படியும் பணத்தைத் தராததால், வலம்புரி ஜான், பானுவை திவால் ஆனவர்கள்என்று அறிவிக்கக் கோரி புதிய மனு தாக்கல் செய்தார் தாஸ்.
இதற்கு பதில் மனு தாக்கல் செய்த வலம்புரி ஜான், தன்னிடம் சொத்துக்கள் இருப்பதாகக்குறிப்பிட்டிருந்தார். இதனால் திவால் ஆனவர் என்ற அவப் பெயரில் இருந்து தப்ப முயன்றார்.
ஆனால், வழக்கை விசாரித்த நீதிபதி அசோக்குமார், வலம்புரி ஜானையும் பானுவையும் திவால்ஆனவர்கள் என்று அறிவித்தார். மேலும் அவர்களது சொத்துக்கள் குறித்து ஆராயவும், அவர்களதுநிதி பரிவர்த்தனைகள் குறித்து அறிக்கை தரவும் அதிகாரி ஒருவரை நியமித்தும் உத்தரவிட்டார்நீதிபதி.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications