ப.சிதம்பரம்- வைகோ பரஸ்பரம் பாராட்டு மழை!
சிவகங்கை:
ப.சிதம்பரம் மிகச் சிறந்த அறிவாளி. அவர் குறைந்தது 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்து நாடாளுமன்றம் செல்வார்என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு வைகோ உள்ளிட்ட விடுதலைப் புலிகள் அனுதாபிகளை கடுமையாக விமர்சனம் செய்தவர்ப.சிதம்பரம்.
அந்தக் காலமெல்லாம் இப்போது மலையேறி விட்டது. சிவகங்கையில் போட்டியிடும் ப.சிதம்பரத்தை ஆதரித்து வைகோ தீவிரப்பிரசாரம் செய்து வருகிறார்.
சிவகங்கை தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்கும் இருவரும் சேர்ந்தே சென்று பிரசாரம் செய்கிறார்கள். மேடைகளில் இருவரும்அருகருகே அமர்ந்து பேசுவதை மக்கள் ஆச்சரியத்தோடு ரசிக்கிறார்கள்.
வைகோவின் பேச்சில் வழக்கத்தை விட கூடுதல் காரம் தென்பட ஆரம்பித்துள்ளது. முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாகசாடுகிறார்.
சிதம்பரத்துக்கு ஆதரவாக சிவகங்கையில் வைகோ பேசுகையில்,
ப.சிதம்பரம் நாட்டின் மிகச் சிறந்த அறிவாளிகளில் ஒருவர். ஒரு காரியத்தைத் திட்டமிட்டு வெற்றிகரமாக செயல்படுத்தும்நிபுணத்துவம் கொண்ட புத்திசாலி. நமது நாடாளுமன்றத்திற்கு இவரைப் போன்றவர்கள் நிறைய பேர் வேண்டும்.
அவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவது சிவகங்கை தொகுதிக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் நல்லது.
அவரை சாதாரணமாக வெற்றி பெற வைக்கக் கூடாது. குறைந்தது 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலாவது சிதம்பரத்தை வெற்றிபெறச் செய்து அவரை நாடாளுமன்றத்திற்கு மக்கள் அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.
பேச்சோடு பேச்சாக, நடிகர் ரஜினிகாந்த்தையும் வாரினார் வைகோ. கடந்த 1996ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது, ஜெயலலிதாஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்றார் ரஜினி. ஆனால் அவர் இப்போது எடுத்துள்ளமுடிவு அவரது தடுமாற்றத்தையே காட்டுகிறது. ரஜினியின் முடிவு தவறானது என்றார் வைகோ.
அதே போல வைகோவை பதிலுக்குப் பாராட்டிவிடுகிறார் ப.சிதம்பரம். பொடாவின் கொடுமைக்குப் பலியான தியாகி வைகோ.பேச்சு சுதந்திரத்துக்காக சிறை சென்ற வீரன் வைகோ என்கிறார்.
சொல்லுங்கப்பா.. சொல்லுங்க...!!
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications