தனுஷ்கோடி ஆதித்தனுக்கு மேலும் ஒரு தலைவலி!
திருநெல்வேலி:
திருநெல்வேலி தொகுதியில் வசந்தகுமார் ஆதரவாளர்களால் ஏற்பட்டுள்ள தலைவலி போதாதென்று, மேலும் ஒருதலைவலி தனுஷ்கோடி ஆதித்தனுக்கு வந்துள்ளது.
நெல்லை தொகுதிக்காக தொழிலதிபர் வசந்தகுமாரும், தனுஷ்கோடி ஆதித்தனும் டெல்லியில் கடும் முயற்சிமேற்கொண்டனர். கடைசியில் வென்றது வாசனின் ஆதரவாளரான தனுஷ்கோடி ஆதித்தன்தான். இதனால்வசந்தகுமார் ஆதரவாளர்கள் கடுப்பாகி உள்ளனர். ஆதித்தனை தோற்கடிக்காமல் விட மாட்டோம் என்று அவர்கள்உறுதி பூண்டுள்ளனர்.
இந் நிலையில் மேலும் ஒரு பிரச்சினை ஆதித்தனை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. ராதாபுரம் சட்டசபை தொகுதிசுயேச்சை உறுப்பினர் அப்பாவு, ஆதித்தனை எதிர்த்து களம் இறங்கப் போவதாகக் கூறியுள்ளார்.
அப்பாவு முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். 2001ல் நடந்த சட்டசபைத் தேர்தலின்போதுராதாபுரம் தொகுதியை அவர் கேட்டார். ஆனால் சீட் மறுக்கப்படவே, சுயேச்சையாக நின்று அபாரமாக வெற்றிபெற்றவர். நெல்லை மாவட்டத்தில் தனி செல்வாக்குடன் திகழ்பவர்.
ஆதித்தனை எதிர்த்து நெல்லை தொகுதியில் மக்கள் கூட்டணியின் வேட்பாளராக நிற்க அப்பாவு முடிவுசெய்துள்ளார். ஆதித்தன் மீது சரமாரியாக புகார்களைக் கூறும் அப்பாவு, ஆதித்தனை வெல்வதே தனது முக்கியப்பணி என்றும் உறுதியுடன் கூறுகிறார்.
ஆதித்தன் மீது சி.பி.ஐ. தொடர்ந்துள்ள ஹவாலா மோசடி வழக்கு, ரூ. 25 லட்சம் மோசடி வழக்கு, ஆதித்தனின்மனைவி மற்றும் குடும்பத்தினர் மீதுள்ள வழக்குகளை பட்டியலிட்டு சின்னப் புத்தகம் ஒன்றையும் தொகுதியில்வெளியிட்டு கலக்குகிறார் அப்பாவு.
அப்பாவு தனக்கு எதிராக கிளம்பியுள்ளதால், பல முனைகளில் எதிர்ப்பை சந்திக்க வேண்டிய இக்கட்டானநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் தனுஷ்கோடி ஆதித்தன்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி












Click it and Unblock the Notifications