திமுக, பாஜக, மதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
சென்னை:
திமுக, பாஜக, மதிமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
சிவகங்கை தொகுதியில் காங்கிரஸின் கை சின்னத்தின் கீழ் ப.சிதம்பரம் போட்டியிடுகிறார். இன்று அவர் தனதுவேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். சிவகங்கையில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், மாவட்டஆட்சித் தலைவரும், தேர்தல் அதிகாரியுமான ராதாகிருஷ்ணனிடம் தனது வேட்பு மனுவை அவர் தாக்கல்செய்தார்.
இதேபோல, திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் எல்.கணேசன், திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர்மணிவாசகனிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மேயர்சாருபாலா தொண்டைமான் உள்ளிட்டோர் அப்போது உடன் இருந்தனர்.
திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜேந்திரனிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
கோபிச் செட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் பாலச்சந்திரனிடம் வேட்பு மனுவை வழங்கினார்.
பெரம்பலூரில் திமுக வேட்பாளர் ராஜாவும், சிவகாசியில் தொகுதியில் மதிமுக வேட்பாளர் சிப்பிப்பாறைரவிச்சந்திரனும் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். தென்காசி தொகுதி கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அப்பாதுரை,நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் சுனில் பாலிவாலிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பாஜக வேட்பாளர்கள் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவையிலும், பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலிலும் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
இன்று அமாவாசை தினம் என்பதால் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் பலரும் இன்று வேட்பு மனுத் தாக்கல்செய்கிறார்கள்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications