கோஷ்டிகளின் ரோதனை!
ஈரோடு:
கோஷ்டிப் பூசலால் காங்கிரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிடும்காங்கிரஸ் வேட்பாளரும், கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான இளங்கோவன் வேதனையுடன்கூறினார்.
மாநில காங்கிரஸ் தலைவர் வாசனுக்கு எதிராக முக்கிய கோஷ்டி நடத்தி வருகிறார் இளங்கோவன். அவருக்குவாசன் தரப்பு ஒத்துழைப்பு தர மறுக்கிறது. இதனால் கோபியில் தனது கட்சியினரின் எதிர்ப்பை சமாளித்துக்கொண்டே அதிமுகவின் சவாலை எதிர்கெண்டுள்ளார் இளங்கோவன்.
இந் நிலையில் கோபியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே காங்கிரஸ் கோஷ்டிப் பூசல் குறித்துவெளிப்படையாகப் பேசினார் இளங்கோவன். அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சியில் பல கோஷ்டிகள் இருப்பதுஉண்மைதான். காங்கிரஸ் போன்ற பெரிய கட்சியில் இதெல்லாம் சாதாரண ஒன்று.
இருப்பினும் தேர்தல் நேரத்தில் கோஷ்டி மோதல் வெளிப்பட்டால் அது கட்சியின் ஒற்றுமை, பலத்தைக் குலைத்துவிடும். எனவே இப்போது கோஷ்டி மோதல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சந்தடிசாக்கில் மதவாத சக்திகள் மத்தியில் ஆட்சியைப் பிடித்து விடும் என்றார் இளங்கோவன்.
கோஷ்டி பூசலா.. இல்லையே: வாசன்
ஆனால், தமிழக காங்கிரசில் கோஷ்டிப் பூசல் மறைந்து விட்டது என்று அக் கட்சியின் மாநிலத் தலைவர் வாசன் கூறினார்.
வேலூரில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பிரதமராக வருவதற்கு காங்கிரஸ் மற்றும் அதைச் சார்ந்த கூட்டணிக் கட்சிகள் முயற்சி எடுத்துவருவதைக் கட்சியினர் நன்கு அறிவர். கட்சி அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை அறிவித்த பின்பு, பூசல்களை மறந்து அவர்களின்வெற்றிக்காக நிர்வாகிகள், தொண்டர்கள் செயல்படுகிறார்கள் என்றார்.
வாசன் கோஷ்டியினர் தனக்குக் கொடுத்து வரும் குடைச்சல் குறித்து பொதுக் கூட்ட மேடையிலேயே இளங்கோவன் வாய் திறந்தநிலையில் வாசன் இவ்வாறு பதில் தந்துள்ளார்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications