ராமதாஸ் ஒரு அரசியல் ஜோக்கர்: ஜெயலலிதா சொல்கிறார்
தேனி:
ராமதாஸ் ஒரு அரசியல் ஜோக்கர் என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
பெரியகுளம் அதிமுக வேட்பாளரும் உயிர்த் தோழி சசிகலாவின் அக்காள் மகனுமான தினகரனை ஆதரித்துதேனியில் ஜெயலலிதா பேசியதாவது:
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் சமீப காலமாக ஒரு ஜோக் அடித்து வருகிறார். அவரோடு கூட்டணிவைத்ததால் தான் அதிமுக ஆட்சியைப் பிடித்ததாம். அவரால் தான் நான் முதல்வர் ஆனேனாம். அரசியல்விதூஷகராகிவிட்ட ராமதாஸ் போன்றவர்களால் தேர்தல் நேரத்தில் நகைச் சுவைகளுக்கு பஞ்சமே இல்லாமல்போய்விட்டது.
தைலாபுரத்து ராமதாசின் அகம்பாவப் பேச்சு வேடிக்கையாக இருந்தாலும், எதற்கும் ஒரு எல்லை வேண்டாமா?.அவரால் அவரது குடும்பத்தைத் தவிர வேறு யாருக்கு லாபம்?. இவரால் தமிழ்நாட்டுக்கு என்ன லாபம்?வன்னியர்களுக்காவது ஏதாவது லாபம் உண்டா?
வன்னியர்களுக்காக கட்சி நடத்துவதாக சொல்லும் ராமதாஸை விட அந்த மக்களுக்கு நான் செய்த நன்மைகள்அதிகம். தேர்தலுக்குப் பின் நான் யார் என்று காட்டுகிறேன் என்கிறார்.
தேர்தலுக்குப் பின் ராமதாசின் கட்சியே இருக்கப் போவதில்லை. அரசியல் களத்தில் இருந்தே ராமதாஸை ஓட, ஓடவிரட்ட மக்கள் தயாராகிவிட்டார்கள். ராமதாசுடன் இருக்கும் 7 கட்சி கூட்டணித் தலைவர்களுக்கும் ஒன்றைசொல்லிக் கொள்கிறேன்.
தமிழகம் என்றுமே வன்முறையை ஆதரித்ததில்லை. செந்நீரை விதைப்பவர்கள் கண்ணீரை கட்டயாம் அறுவடைசெய்து தான் ஆக வேண்டும். அது இயற்கையின் நியதி. ராஜிவ் காந்தியைக் கொன்ற தணு, சிவராசன், பிரபாகரன்,பொட்டு அம்மனின் படங்களை ஏந்தி, அவர்களை வாழ்த்தி கோஷம் எழுப்பியவாறு தனது கட்சிக்காரர்களைபேரணி நடத்தச் சொல்லி அதை மேடையில் இருந்து ரசித்தவர் தான் ராமதாஸ்.
இன்று இதே ராமதாஸ், ராஜிவ் காந்தியின் மனைவியோடு கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிறார். இதுஎப்படிப்பட்ட கூட்டணி என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்.
அந்தக் கூட்டணியில் இருக்கும் வைகோவுக்கு வசனம் பேசுவதே வாழ்க்கையாகிவிட்டது. இந்த சவடால்மன்னனால் தமிழ்நாட்டுக்கு ஏதாவது ஒரு நன்மை ஏற்பட்டதாக யாராவது சொல்ல முடியுமா?
அந்தக் கும்பலில் வலதுசாரி, இடதுசாரி என இன்னும் சில கட்சிகளும் இருக்கினறன. இவர்கள் எல்லாம் கும்பலாய்சேர்ந்து இல்லாத ஊருக்கு போகாத வழியைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களது ஒரே குறிக்கோள் என்னை எதிர்ப்பது தான். வேறு எந்த கொள்கையும் அவர்களுக்குக் கிடையாதுஎன்றார் ஜெயலலிதா.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications