கிராமத்தினருடன் மோதல்: புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர்கள் 2 பேர் கொலை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டில் ஏற்பட்ட தகராறில் இரு கல்லூரி மாணவர்கள் கொலைசெய்யப்பட்டனர். இதையடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
புதுக்கோட்டையை அடுத்த கரம்பைக்குடியில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடந்தது. இதைக் காண வந்தபுதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர்கள் சிலருக்கும் முள்ளம்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தசிலருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது.
இந்தத் தகராறு கைகலப்பாக மாறியது. இரு தரப்பினரும் அடித்துக் கொண்டனர். இதில்மாணவர்களை கிராம மக்கள் கடுமையாகத் தாக்கியதாகத் தெரிகிறது.
இதையடுத்து கல்லூரிக்குத் திரும்பிய மாணவர்கள், அங்கிருந்த மேலும் பலரையும் திரட்டிக்கொண்டு அரிவாள், கத்தி, உருட்டுக் கட்டைகளுடன் முள்ளம் குறிச்சி கிராமத்துக்குச் சென்றனர்.
அங்கு சென்ற தங்களைத் தாக்கியவர்களைத் திருப்பித் தாக்க முனைந்தனர். அப்போது கிராமத்தினர்பயங்கர ஆயுதங்களுடன் மாணவர்களைத் தாக்கினர். பல மாணவர்களுக்கு அரிவாள் வெட்டும்,கத்திக் குத்தும் விழுந்தது.
கத்திக் குத்தில் பலத்த காயமடைந்த கருப்பையா, வீரமணி ஆகிய இரு மாணவர்கள் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தனர். இரு தரப்பிலும் காயமடைந்த பலரும் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து அங்கு ஆயுதம் தாங்கியபோலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மூத்த அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
இரு நாட்களுக்கு முன்னர் தான் புதுக்கோட்டையையடுத்த கீரனூரில் ஜாதிக் கலவரம் வெடித்தது. இந்நிலையில் இந்தக் கொலைகள் நடந்துள்ளன.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications