கோஷ்டி பூசலா.. இல்லையே என்கிறார் வாசன்
வேலூர்:
தமிழக காங்கிரசில் கோஷ்டிப் பூசல் மறைந்து விட்டது என்று அக் கட்சியின் மாநிலத் தலைவர் வாசன் கூறியுள்ளார்.
நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பிரதமராக வருவதற்கு காங்கிரஸ் மற்றும் அதைச் சார்ந்த கூட்டணிக் கட்சிகள்முயற்சி எடுத்து வருவதைக் கட்சியினர் நன்கு அறிவர். கட்சி அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை அறிவித்த பின்பு,பூசல்களை மறந்து அவர்களின் வெற்றிக்காக நிர்வாகிகள், தொண்டர்கள் செயல்படுகிறார்கள் என்றார்.
வாசன் கோஷ்டியினர் தனக்குக் கொடுத்து வரும் குடைச்சல் குறித்து பொதுக் கூட்ட மேடையிலேயேஇளங்கோவன் வாய் திறந்த நிலையில் வாசன் இவ்வாறு பதில் தந்துள்ளார்.
வாடன் மேலும் கூறுகையில், வேலூரில் தோல் தொழிற்சாலைகள் நலிவடைந்து விட்டன. தீப்பெட்டித்தொழிற்சாலைகள் இயந்திரமயமாகி வருவதால் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் நிலை உள்ளது.
சிட்டா நூல் கலால் வரி, கைத்தறி துணிக்கான விற்பனை வரி ஆகியவற்றால் நெசவுத் தொழில்பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பாதிப்பு, வேலூர் குடிநீர் பிரச்சினை தீர்வுக்கான ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டம், அரியூர் நூற்பாலை மூடல் போன்ற மக்களின் பிரச்சினைகளை ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கட்சிகள் சரி செய்யும்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது விவகாரத்தில் பொடா மறு ஆய்வுக் குழுவின் தீர்ப்புக்கு தமிழக அரசுகட்டுப்பட மறுக்கிறது. அக் குழுவை அமைத்த பாஜக தான் இதைத் தட்டிக் கேட்க வேண்டும்.
தமிழகத்துக்கு தேர்தல் பிரசாரத்திற்காக சோனியாகாந்தி மே முதல் வாரத்தில் வருகிறார் என்றார் வாசன்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
TASMAC: பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் ஏன்? யார் யாருக்கு லஞ்சம் போகிறது தெரியுமா? முழு லிஸ்டடால் ஷாக் -
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
விஜய்யை திட்டமிட்டு புறக்கணித்த அமித்ஷா? கேரள முதல்வரை மீட் பண்ணிருக்காரே.. டெல்லியில் நடந்தது என்ன? -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
கவர்னர் இனி யுனிவர்சிட்டி வேந்தரா? விஜய்யின் ஒப்புதலோடுதான் அமைச்சர் சொல்கிறாரா.. விசிக கேள்வி -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
சமூக வலைதளங்களை தவெகவினர் தந்திரமாக பயன்படுத்தினார்கள்.. கே.என்.நேரு பேச்சு -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள்












Click it and Unblock the Notifications