வேட்பாளர்களின் சொத்து விவரம்: முதலிடத்தில் ப.சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்திலேயே மிகப் பணக்கார வேட்பாளராக ப.சிதம்பரம் விளங்குகிறார். இவர் தனது சொத்து மதிப்பை ரூ. 15கோடி என கணக்குக் காட்டியுள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது குடும்பச் சொத்துக்களின் கணக்கையும் காட்டியாக வேண்டும்என்று உத்தரவு போடப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்கள் வேட்பாளர்கள் தங்களது சொத்துக்கழை பினாமிகளில்பதுக்கிவிட்டதால், கார் இல்லை, வீடு கூட இல்லை என கதை விட்டு வருகின்றனர்.

இந் நிலையில் வேட்பு மனுவுடன் சிதம்பரம் தாக்கல் செய்துள்ள சொத்து விவரப் பட்டியலில் தனக்கு ரூ. 15 கோடிசொத்து இருப்பதாகக் கூறியுள்ளார். அந்த வகையில் இதுவரை தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தவேட்பாளர்களியே பெரிய பணக்காரராக ப.சிதம்பரம் விளங்குகிறார்.

ப.சிதம்பரத்தின் சொத்து விவரம்:

அசையும், அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ. 12.8 6 கோடி. 3 காபித் தோட்டங்கள் (ஒன்று சிதம்பரத்தின்பெயரிலும், 2 மனைவி நளினி பெயரிலும் உள்ளன), முட்டுக்காடு, செங்கல்பட்டு, காரைக்குடியில் சொத்துக்கள்,சென்னையில் ரூ. 2 கோடியில் ஒரு வீடு ஆகியவை உள்ளதாக ப.சிதம்பரம் கணக்கு காட்டியுள்ளார்.

சுகுமாறன் நம்பியார்- ரூ. 1.25 கோடி

நடிகர் எம்.என். நம்பியாரின் மகனும், வட சென்னை பாஜக வேட்பாளருமான சுகுமாறன் நம்பியார், தனதுசொத்து மதிப்பு ரூ. 1.25 கோடி என கூறியுள்ளார். தன்னிடம் கார், வீடு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இளங்கோவன்- ரூ. 92 லட்சம்

முன்னாள் காங்கிரஸ் தலைவர் இளங்கோவனின் சொத்து மதிப்பு ரூ. 92 லட்சமாகும். இதில் அவரது மனைவிஉஷாவின் பெயரில் ரூ. 3.84 லட்சத்திற்கு நகைகள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

பொன்.ராதாகிருஷ்ணன்- ரூ. 53.75 லட்சம்

மத்திய அமைச்சராக உள்ள பொன். ராதாகிருஷ்ணன் சொந்த வீடு கூட இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.தன்னிடம் மொத்தம் ரூ. 53.75 லட்சம் சொத்து இருப்பதாகக் கூறியுள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள சொத்துக்கணக்கு:

ரூ. 2.85 லட்சம் பணம் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ரூ. 10,000 கையில் உள்ளது. வெள்ளிமலைப்பகுதியில் ரூ. 3.75 லட்சம் மதிப்புள்ள 75 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதுதவிர ரூ. 2.75 லட்சம் மதிப்புள்ள 10ஏக்கர் தரிசு நிலம் உள்ளது. சொந்த வீடு, கட்டடம் எதுவும் இல்லை.

ராமதாஸ் மருமகன் சொத்து- ரூ. 38 லட்சம்

திண்டிவனம் பாமக வேட்பாளரும், பாமக தலைவர் ராமதாஸின் மருமகனுமான டாக்டர் தன்ராஜின் சொத்துவிவரம்:

ரூ. 3 லட்சம் ரொக்கம் கையிருப்பில் உள்ளது. வங்கியில் ரூ. 5.88 லட்சம் இருப்பு உள்ளது. ரூ. 5 லட்சத்திற்குஅவரது பெயரிலும், மனைவியின் பெயரிலும் எல்.ஐ.சி. பாலிஸி உள்ளது. ரூ. 6 லட்சம் மதிப்புள்ள எல்.ஐ.சி.பாலிசிக்கள் இரு மகன்களது பெயரில் உள்ளன. மனைவியிடம் ரூ. 5.06 லட்சம் மதிப்புள்ள நகைகள் உள்ளன.இவரிடம் ரூ. 45,000 மதிப்புள்ள நகைகள் உள்ளன.

மணிசங்கர் ஐய்யர்- ரூ. 1.01 கோடி

மயிலாடுதுறையில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மணிசங்கர ஐய்யர் தன்னிடம் ரூ. 1.01கோடிக்கு சொத்து இருப்பதாகக் கூறியுள்ளார். கார்கள், பண்ணை வீடுகள் என்று போகிறதுஅய்யரின் சொத்து விவரம்.

ராசா- ரூ. 58.26 லட்சம்

பெரம்பலூரில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் ராசா தனக்கு ரூ. 58.26 லட்சம்சொத்துக்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

காதர் மொய்தீன்- ரூ. 35 லட்சம்

வேலூரில் அகில இந்திய முஸ்லீம் லீக் சார்பில் போட்டியிடும் பேராசிரியர் காதர் மொய்தீன் தனக்குரூ. 35 லட்சம் சொத்து இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரக்கோணம் வேலு:

அரக்கோணத்தில் போட்யிடும் பா.ம.க. வேட்பாளர் வேலு தன்னிடம் ரூ. 47 லட்சம் சொத்துஉள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தர்மபுரி செந்தில்:

அதே போல தர்மபுரியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் செந்தில் தனக்குரூ. 80 லட்சம் சொத்து இருப்பதாகக் கூறியுள்ளார்.

திமுகவின் திருச்செங்கோடு தொகுதி வேட்பாளரான முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெதீசன்தனக்கு ரூ. 85 லட்சம் சொத்து இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளதை நாம் நேற்றே வெளியிட்டோம்.

ஆக, இந்தத் தேர்தலில் சாமானியர்கள் யாரும் போட்டியிடவில்லை. போட்டியில் உள்ள பெரும்பாலானவர்கள்லட்சாதிபதிகள் மற்றும் கோடீஸ்வரர்களே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+