ரஜினியின் ஆதரவை ஏற்க முன் வந்தது அதிமுக
வந்தவாசி:
ரஜினியின் ஆதரவை ஏற்கத் தயார் என்று அதிமுக முதல் முறையாக அறிவித்துள்ளது.
தானே வலிய வந்து ஆதரவு தந்தும் கூட ரஜினியை அதிமுக உதாசீனப்படுத்தியே வந்தது.அதிமுகவுக்கு பயந்து கொண்டு பா.ஜ.கவும் இந்த விஷயத்தில் அடக்கி வாசித்தது.
இந் நிலையில் வந்தவாசி தொகுதியின் அதிமுக வேட்பாளர் ராஜலட்சுமி ராஜனை ஆதரித்துமேலமலையனூரில் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் பேசிய அதிமுக பொருளாளரும்,சசிகலாவுக்கு மிகவும் நெருக்கமானவருமான திண்டுக்கல் சீனிவாசன், ரஜினியின் ஆதரவை அதிமுகவரவேற்பதாகக் கூறினார்.
அதிமுகவின் முக்கிய நிர்வாகி ஒருவர் ரஜினியின் ஆதரவை வரவேற்றுப் பேசியிருப்பது இதுவேமுதல்முறையாகும்.
அவர் பேசுகையில், ரஜினி ரசிகர்களுக்கு நட்புக்கரம் நீட்ட எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை.அதிமுக தொண்டர்களும் ரஜினி ரசிகர்களும் இணைந்து பணியாற்றுவார்கள் என்றார்.
சமீபத்தில் தான் வட சென்னை கிளைக் கழகச் செயலாளர் ஒருவர் ரஜினி படத்தை அதிமுகபோஸ்டரில் அச்சடித்ததற்காக கட்சியை விட்டு நீக்கினார் முதல்வர் ஜெயலலிதா.
ஆனால், மாநிலம் முழுவதும் தீவிரமான அதிமுக எதிர்ப்பு அலை வீசி வருவதாக செய்திகள் குவிந்துவருவதால் ஜெயலலிதாவின் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ரஜினியின் ஆதரவு தனக்குபேருதவி செய்யும் என்று அவர் நினைக்க ஆரம்பித்துள்ளார்.
இதையடுத்தே திண்டுக்கல் சீனிவாசன் மூலமாக முதல்முறையாக ரஜினிக்கு கிரீன் சிக்னல்தரப்பட்டுள்ளது.
ரஜினி ரசிகர்கள் புகார்:
பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி ரஜினி ரசிகர்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார்கடிதம் அனுப்பியுள்ளனர்.
டெல்லியில் உள்ள ரஜினி ரசிகர்கள் நலச் சங்கம் சார்பில் அதன் தலைவர் பாண்டியன் , தலைமை தேர்தல்ஆணையருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
ராமதாசுக்கு எதிராக மதுரையில் ரஜினி ரசிகர்கள் கறுப்புக் கொடி காட்டிய போது, அவர்கள் கடுமையாகத்தாக்கப்பட்டனர். தாக்குதல் நடத்த வேண்டும் என முன்பே திட்டமிட்டு கம்பு, மற்றும் ஆயுதங்களுடன் ராமதாசின்ஆதரவாளர்கள் வந்துள்ளனர். இச் சம்பவத்தில் 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளதாக தமிழகதேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இதுவரை தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும்எடுக்கவில்லை. தேர்தல் விதிகளை மீறி ரஜினி ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்திய ராமதாஸ் மற்றும்பா.ம.கவினருக்கு எதிராக தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம் என்றுதெரிவித்துள்ளார்.
-
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications