சென்னை துறைமுகத்தில் ரூ. 1 கோடி வெளிநாட்டு கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல்
சென்னை:
சீனாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 1 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை மத்தியவருவாய்த்துறையின் உளவுப் பிரிவினர் சென்னை துறைமுகத்தில் கைப்பற்றினர்.
இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து கடந்த ஒரு வாரமாகவே துறைமுகத்தில்கண்காணிப்பை தீவிரப்படுத்தியது வருவாய்த்துறை.
சீனாவில் இருந்து கடந்த 12ம் தேதி வந்திறங்கிய ஒரு கண்டெயினரை சோதனையிட்டபோது அதில்20,000 பெட்டிகளில் பிரபலமான பிராண்டைச் சேர்ந்த 2 லட்சம் சிகரெட் பாக்கெட்டுகள் இருந்தன.இதன் மதிப்பு ரூ. 1 கோடியாகும்.
ஆனால், இந்த கண்டெயினரில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 40 கம்ப்யூட்டர் டேபிள்கள் 435பெட்டிகளில் சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்டதாக ஆவணங்களில் கடத்தல்காரர்கள்குறிப்பிட்டிருந்தனர்.
கஸ்டம்ஸ் துறையினருக்கு லஞ்சம் தந்துவிட்டு வெறும் ரூ. 1.25 லட்சம் மட்டும் வரியைக்கட்டிவிட்டு இந்த ரூ. 1 கோடி மதிப்பு சிகரெட்டுகளை கடத்தல்காரர்கள் எடுத்துச் செல்ல இருந்தநிலையில் உளவுப் பிரிவினரிடம் சிக்கிக் கொண்டனர்.
இவர்களுக்கு உதவியாக இருந்த கஸ்டம்ஸ் கிளியரன்ஸ் ஏஜென்ட் ஒருவரும், கடத்தலில் நேரடித்தொடர்புடைய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த இறக்குமதியைச் செய்ததாக சென்னையில் ஒரு நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டுஅதன் முகவரியும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த முகவரி போலியானதுஎன்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் கஸ்டம்ஸ் ஆட்களுக்கும் தொடர்பிருக்கலாம் என்பதால் அவர்களிடமும் விசாரணைநடக்கவுள்ளது.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித்












Click it and Unblock the Notifications