சொத்து கணக்கு: பிரபு - ரூ.10 கோடி; மோகன் - ரூ.7 லட்சம்
நீலகிரி:
நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பிரபு ரூ.10 கோடிக்கு சொத்துக் கணக்குகாட்டியுள்ளார். மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மோகன் ரூ.7 லட்சத்துக்கு சொத்துஇருப்பதாக தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் திருமாவளவன் (சிதம்பரம்), பிரபு, மோகன், திமுகவேட்பாளர்கள் ராதிகா செல்வி (திருச்செந்தூர்), பவானி ராஜேந்திரன் (ராமநாதபுரம்), காங்கிரஸ் வேட்பாளர்கள்சித்தன் (திண்டுக்கல்), தங்கபாலு (சேலம்), ராணி (ராசிபுரம்), கார்வேந்தன் (பழனி), தனுஷ்கோடி ஆதித்தன்(திருநெல்வேலி),
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பெல்லார்மின் (நாகர்கோவில்), இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயன்(கோவை), பாஜக வேட்பாளர் லலிதா குமாரமங்கலம் (புதுவை) ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர்.
வேட்பு மனுத் தாக்கல் செய்யும்போது, தங்களிடம் உள்ள சொத்து மதிப்பு குறித்த விவரங்களையும் கொடுத்தனர்.அதன்படி பிரவுக்கு ரூ.6.43 கோடி சொத்தும், அவரது மனைவி மற்றும் மகன் பெயரில் ரூ.3.81 கோடி எனமொத்தம் ரூ.10 கோடி சொத்து இருப்பதாகக் கூறியுள்ளார்.
தங்கபாலு ரூ.5 கோடிக்கும், ராணி ரூ.1.37 கோடிக்கும், சித்தனுக்கு ரூ.1.32 கோடிக்கும், கார்வேந்தன் ரூ.1.32கோடிக்கும், ராதிகா செல்வி ரூ.2.12 கோடிக்கும், பவானி ராஜேந்திரன் ரூ.1.45 கோடிக்கும் சொத்துக் கணக்குகாட்டியுள்ளனர்.
பெல்லார்மின் ரூ.31 லட்சத்துக்கும், மோகன் ரூ.7 லட்சத்துக்கும் சொத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.சுப்பராயன் தன்னுடைய பெயரில் சொத்து இல்லையென்றும், மனைவி பெயரில் ரூ.18 லட்சம் சொத்துஇருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் வங்கி இருப்பு ரூ.1.68 லட்சமும், ஒரு அம்பாஸிடர் காரும் இருப்பதாக சொத்துக் கணக்கில்கூறியுள்ளார்.
அதிமுக வேட்பாளர்கள் பாதர் சயீத் (தென் சென்னை) தன்னிடம் ரூ.2 கோடி சொத்தும், பாலகங்கா (மத்தியசென்னை) தன்னிடம் ரூ.52 லட்சம் சொத்தும் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
தென் சென்னை திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு ரூ.2.5 கோடிக்கு சொத்துக் கணக்குத் தாக்கல் செய்துள்ளார்.
வேட்புமனுத் தாக்கலின்போது, தனுஷ்கோடி ஆதித்தன் சொத்துக் கணக்தைத் தாக்கல் செய்யவில்லை. வேட்புமனுத்தாக்கல் முடிவதற்குள் சொத்துப் பட்டியலை ஒப்படைக்குமாறு மாவட்ட தேர்தல் அதிகாரி அவரிடம்கூறினார்.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications