இங்கிலாந்தில் அதிகரித்து வரும் இந்திய மாணவர்கள்
லண்டன்:
இங்கிலாந்தில் கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2020ம்ஆண்டில் இந்த எண்ணிக்கை சுமார் 30,000 ஆக உயரும் என்று தெரிகிறது. இதன்மூலம் அமெரிக்கா, ஜெர்மனி,பிரான்ஸை விட அதிகமான இந்திய மாணவர்கள் இங்கிலாந்தில் இருப்பார்கள்.
பிரிட்டிஷ் கவுன்சிலும் பிரிட்டன் பல்கலைக்கழகங்களும் நடத்தியுள்ள ஆய்வுகளில் இந்த விவரம்தெரியவந்துள்ளது. அதன் முழு விவரம்:
2005ம் ஆண்டில் இங்கிலாந்தில் படிக்கும் சீன மாணவர்களின் எண்ணிக்கை 32,000 ஆக இருக்கும். 2020ம்ஆண்டில் இது 1,30,900 ஆக உயரும். அதேபோல் அடுத்த ஆண்டில் 28,000 ஆக இருக்கும் கிரீஸ் நாட்டுமாணவர்களின் எண்ணிக்கை 2020ல் 34,800 ஆக அதிகரிக்கும்.
இந்த இரு நாடுகளுக்கும் அடுத்தபடியாக 2020ம் ஆண்டில் இந்திய மாணவர்கள் 29,800 பேர் இங்கிலாந்தில்படிப்பார்கள். 2005ம் ஆண்டில் மட்டும் 8,600 இந்திய மாணவர்கள் மேல்படிப்புக்காக இங்கிலாந்து வருவார்கள்.
வெளிநாட்டு மாணவர்களின் மேல்படிப்பு மூலம் இங்கிலாந்துக்கு 3 பில்லியன் பவுண்ட்ஸ் வருவாய் கிடைக்கிறது.2020ம் ஆண்டில் இது 13 பில்லியன் பவுண்ட்ஸ் ஆக உயரும். (இப்போதே வெளிநாட்டு மாணவர்கள் மூலம்இங்கிலாந்துக்கு 11 பில்லியன் பவுண்ட்ஸ் வருவாய் கிடைப்பதாக இன்னொரு ஆய்வு தெரிவிக்கிறது)
இதனால் இங்கிலாந்தின் வருவாயில் வெளிநாட்டு மாணவர்கள் பெரும் பங்கு வகிக்க உள்ளனர். கார், விமானஏற்றுமதியைவிட அதிக வருமானம் கல்வி மூலம் கிடைக்கப் போகிறது.
இப்போது கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலம் 14.3 பில்லியன் பவுண்ட்ஸ்சும், வர்த்தகம் மூலம் 13.6 பில்லியன்பவுண்ட்ஸ்சும் கார், உணவு பொருட்கள் மற்றும் புகையிலை ஏற்றுமதி மூலமும் தலா 10 பில்லியன் பவுண்டஸ்சும்இங்கிலாந்துக்கு வருவாயாகக் கிடைக்கிறது.
விமானம், கப்பல் ஏற்றுமதி மூலம் 6.5 பில்லியன் பவுண்ட்ஸ்சும் கம்ப்யூட்டர்கள் ஏற்றுமதி மூலம் 2.6 பில்லியன்பவுண்டஸ்சும் கிடைக்கிறது.
தற்போது இங்கிலாந்தில் உள்ள 2,70,000 வெளிநாட்டு மாணவர்கள் வருடத்துக்கு 16,000 பவுண்ட்ஸ் செலவழித்துமேல்படிப்பு படிக்கின்றனர். இது 2010ல் 4,00,00 பவுண்ட்ஸ்சாகவும் 2020ல் 8,70,000 பவுண்ட்சாகவும்அதிகரிக்கும். வேலை வாய்ப்புக்கள் வாங்கித் தருவதில் இங்கிலாந்து கல்வி நிறுவனங்கள் இப்போது இருப்பதுபோலவே தொடர்ந்து முன்னிலையில் இருந்தால் 2020ல் வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கை 5,22,000 ஆகஉயரும்.
ஆசிய நாடுகளில் இருந்து இங்கிலாந்தில் கல்விக்காகச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அண்மைக் காலமாகஉயர்ந்தே வந்துள்ளது. சமீப காலத்தில் சீன மாணவர்கள் 15 சதவீதமும், இந்திய மாணவர்கள் 13 சதவீதம்,பாகிஸ்தான் மாணவர்களின் எண்ணிக்கை 12.6 சதவீதமும் அதிகரித்துள்ளது.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications