3 வயது சிறுமி நரபலி: கண்களைத் தோண்டி கொடூரம்
போத்தனூர்:
கோவை அருகே 3 வயது சிறுமி கண்கள் தோண்டப்பட்டு, ரத்தக் குழாய்கள் அறுக்கப்பட்டு நரபலிகொடுக்கப்பட்டிருக்கிறாள். இச் சம்பவத்தால் அப் பகுதியில் பெரும் பீதி நிலவுகிறது.
கோவையைச் சேர்ந்த விவசாயி தர்மலிங்கம்- மகேஸ்வரி தம்பதியின் மகள் ஷாலினி (வயது 3).மகேஸ்வரி இப்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இதையடுத்து பிரசவத்துக்காக கோவைபோரூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு மகள் ஷாலினியுடன் சென்றார்.
துறுதுறுவென விளையாடிக் கொண்டிருந்த ஷாலினி இரு தினங்களுக்கு முன் திடீரென காணாமல்போனாள். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் வீடே கவலையில் ஆழ்ந்திருந்தது.
இந் நிலையில் அருகே உள்ள குளக்கரையில் ஷாலினி கோரமான நிலையில் பிணமாகக் கிடந்தாள்.அவளது உடலைக் கைப்பற்றிய பெற்றோர் மற்றும் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அச் சிறுமியின் கண்கள் தோண்டப்பட்டிருந்தன. கை, கால்களில் ரத்தக் குழாய்கள் அறுக்கப்பட்டுஉடலில் இருந்து முழு ரத்தமும் வழிந்தோடச் செய்யப்பட்டு மிகக் கொடூரமான முறையில் இந்தக்கொலை நடந்துள்ளது.
கைகளில் மடக்கும் இடத்திலும், கால்களில் முட்டிக்குப் பின் புறத்திலும் கத்தியால் ரத்தக் குழாய்களைவெட்டியிருக்கிறது நரபலிக் கும்பல். அழகிய சிறுமியின் கண்களும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
இச் சம்பவம் அந்தப் பகுதியையே பெரும பீதியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
இந்த நரபலிக் கொலைக் கும்பலைப் பிடிக்க 5 தனிப்படைகளை போலீசார் அமைத்துள்ளனர். இதுகேரள மாந்தீகக் கும்பலின் கைவரிசையாக இருக்கலாம் என்றும் கருதப்படுவதால் ஒரு போலீஸ்படை கேரளத்துக்கு விரைந்துள்ளது.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications