தனுஷ்கோடிக்கு எதிராக வசந்த் குமார் சுயேச்சையாக போட்டி
திருநெல்வேலி:
குமரி அனந்தனின் தம்பியும், கட்சி மேலிடத்தால் சீட் மறுக்கப்பட்டவருமான வசந்த் அண்ட் கோ அதிபர் வசந்த் குமார்திருநெல்வேலி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
திருநெல்வேலி தொகுதியிலிருந்து போட்டியிட காங்கிரஸ் சார்பில், தனுஷ்கோடி ஆதித்தனும், வசந்த் குமாரும் கடுமையாகமோதினார்கள். இதனால் அந்தத் தொகுதிக்கு வேட்பாளரை அறிவிக்க முடியாமல் காங்கிரஸ் தலைமை திணறியது.
தனுஷ்கோடி ஆதித்தனுக்கு வாசனின் ஆதரவு இருந்தது. ஆனால், டெல்லியில் தனது பண பலத்தால் தலைவர்களை வாங்கியவசந்த் குமார், தொகுதியைப் பெற்றுவிட தீவிரமாக முயன்றார்.
கடைசியில் சோனியா காந்தி தலையிட்டு தனுஷ்கோடி ஆதித்தனுக்குத திருநெல்வேலியை ஒதுக்கினார்.
இதனால் கடுப்பானார் வசந்த் குமார். நெல்லையிலும், சென்னையிலும் தனது ஆதரவாளர்களை விட்டு போராட்டம் நடத்தினார்.
இந் நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று திடீரென்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர்அலுவலகத்திற்கு ஆதரவாளர்களுடன் வந்த வசந்த் குமார், சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கட்சி மேலிடத்தின் உத்தரவின் பேரில்தான் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல்செய்துள்ளேன் (!!!). வியாழக்கிழமை மாலைதான் எனக்கு உத்தரவு வந்தது. கட்சி மேலிடம் வாபஸ் பெற உத்தரவிட்டால்மனுவை நிச்சயம் வாபஸ் பெறுவேன் என்றார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications