பாமக தொகுதிகள் பதற்றம் நிறைந்தவை: பா.ஜ.க
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளையும் பதற்றம் நிறைந்த தொகுதிகளாக அறிவித்து அங்கு கூடுதல் பாதுகாப்புஅளிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக அகில இந்திய செயலாளர் இல.கணேசன்கோரியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பாட்டாளி மக்கள் கட்சி ஜனநாயகத்தைக் கைவிட்டு விட்டுவன்முறைப் பாதைக்குத் திரும்பி இருக்கிறது. தோல்வி பயத்தால் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது.
எனவே அக்கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளையும் பதற்றம் நிறைந்த தொகுதிகளாக அறிவித்து அங்கு கூடுதல் பாதுகாப்புக்குதேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீருவோம். பாபர் மசூதி என்பது அடியாக்க வந்தவர்கள் கட்டிய அவமானச் சின்னம்.அதற்கும் இந்திய முஸ்லீம்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
திமுகவைவிட அதிமுக எங்களுக்கு கொள்கைரீதியில் ஒத்துப் போகிறது. அயோத்தி கோவில், மதமாற்றத் தடை சட்டம்,அன்னியர் உயர் பதவிக்கு வரக் கூடாது போன்ற விஷயங்களில் அதிமுக எங்களுடன் ஒன்றுபட்டுச் செல்கிறது என்றார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பிரசாரத்திற்கு ரஜினியை அழைப்பீர்களா என்று கேட்டபோது, பிரச்சாரத்தில் ஈடுபடுவதா இல்லையாஎன்பது குறித்து ரஜினிதான் தீர்மானிக்க வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்யக் கூடிய அளவுக்கு அவருக்குதிறமை உண்டு.
எப்போது என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். அவர் என்ன முடிவெடுத்தாலும் அதை பாஜக வரவேற்கும்.அவரை பிரச்சாரத்துக்கு அழைத்து தர்மசங்கடம் ஏற்படுத்த விரும்பவில்லை என்றார் கணேசன்.
முதலில் 300 இடங்களைப் பிடிப்போம் என்று பா.ஜ.க சொன்னது. ஆனால், இப்போது தேர்தலுக்குப் பின் புதிய கூட்டணிகள்ஏற்படும் என்று வாஜ்பாய் கூறியிருக்கிறாரே என்று கேட்டதற்கு,
அவர் என்ன அர்த்தத்தில் சொன்னார் என்று தெரியவில்லை. ஆனால், தமிழக கட்சிகளை மனதில் வைத்து அவர் பேசவில்லைஎன்றார் கணேசன்.
மேலும் அவர் பேசுகையில், திமுக கூட்டணி முரண்பாடுகள் நிறைந்தது. அதில் இடம் பெற்றுள்ள காங்கிரஸும், கம்யூனிஸ்ட்கட்சிகளும் காலத்திற்கு காலம், மாநிலத்திற்கு மாநிலம் ஒரு கொள்கையைக் கொண்டுள்ள கட்சிகள். நிலையற்ற ஒரு நிலையைமேற்கொள்வதே அக் கட்சிகளின் வழக்கம்.
ராஜீவ் காந்தியை கொலை செய்த விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய கட்சி திமுக என்று நாங்கள் எப்போதும் கூறியதில்லை.ஆனால் அப்படிக் கூறிய காங்கிரஸ் கட்சிதான் இன்று திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது என்றார் கணேசன்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள்












Click it and Unblock the Notifications