நாட்டின் மிக மோசமான முதல்வராக ஜெ. மீண்டும் தேர்வு
டெல்லி:
நாட்டின் பல்வேறு மாநில முதல்வர்களின் செயல்பாடுகள் குறித்து இந்தியா டுடே இதழ் நடத்தியஇரண்டாவது கருத்துக் கணிப்பிலும் ஜெயலலிதா மீண்டும் கடைசி இடத்தைப் பிடித்து நாட்டிலேயேமிக மோசமான முதல்வர் என்ற பெருமையை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
இந்தியா டுடேவும் சர்வதேச தர கருத்துக் கணிப்பு அமைப்பான ஓ.ஆர்.ஜி-மார்க் ஆகியவையும்இணைந்து மக்களிடம் நடத்திய முதல் ஆய்விலும் ஜெயலலிதா தான் நாட்டிலேயே மட்டமானமுதல்வர் என்ற பெயரைப் பெற்றார்.
தமிழக மக்கள் அவருக்கு அனைத்துத் துறைகளிலும் கடைசி மதிப்பெண் தான் வழங்கியிருந்தனர்.
இந் நிலையில் மக்களவைத் தேர்தலையொட்டி மீண்டும் அதே போன்ற ஆய்வை இந்தியா டுடேவழங்கியது. இதிலும் தமிழக மக்கள், மற்றும் நாட்டின் பிற மாநில மக்கள் ஜெயலலிதாவைத் தான்மிக மட்டமான முதல்வர் என கருத்துத் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் சிறந்த முதல்வராக டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் மீண்டும் தேர்வாகியுள்ளார்.
2வது இடத்தில் ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக், மூன்றாவது இடத்தில் குஜராத் முதல்வர்நரேந்திர மோடி ஆகியோர் உள்ளனர்.
பிகார் முதல்வர் ராப்ரி தேவி கடைசிக்கு ஒரு படி முதல் நிலையில் உள்ளார். ராப்ரி தேவிக்கு அடுத்தநிலையில் கடைசி இடத்தைப் பிடித்திருப்பது நம் முதல்வர் ஜெயலலிதா. ஜெயலலிதாவுக்குக்கிடைத்துள்ள மதிப்பெண் மைனஸ் 19.
அடக்குமுறை, போலீஸ் ராஜ்ஜியம் நடத்துவது, அரசியல் பழிவாங்கல், சர்வாதிகாரம் ஆகியவையேஜெயலலிதா மீது மக்களுக்கு பெரும் வெறுப்பை ஈட்டித் தந்துள்ளதாக இந்தியா டுடேதெரிவிக்கிறது.
மேலும் ஜெயலலிதாவின் புதிய இந்துத்வா அரிதாரத்தையும் தமிழக மக்கள் அங்கீகரிக்கவில்லைஎன ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதே போல ஜெயலலிதாவின் நண்பரும் ஹைடெக் சீப் மினிஸ்டருமான ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு கடந்த ஆய்வில் 3வது இடத்தில் இருந்தார். இந்த முறை 6வது இடத்துக்குத்தள்ளப்பட்டிருக்கிறார். ஆந்திராவில் விவசாயிகள் தற்கொலைகளும் நடுத்தர மக்கள் கடும்சிரமத்திலும் உள்ள நிலையில் சாப்ட்வேர் வளர்ச்சியில் மட்டும் அக்கறை காட்டி வந்ததால் அவருக்குஇந்த நிலை ஏற்பட்டுள்ளது.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications