பா.ம.க. மீது தேர்தல் ஆணையத்திடம் ரஜினி இன்று புகார்
டெல்லி:
தலைமைத் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தியை இன்று நேரில் சந்தித்து, மதுரையில் தனது ரசிகர்கள்தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸைக் கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறுகோரிக்கை வைக்கவுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
மதுரையில் ரஜினி ரசிகர்கள், பா.ம.க. நிறுவனர் ராமதாஸுக்கு கருப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்தினர்.இதில் பா.ம.க. தொண்டர்கள் தாக்கியதில், ரஜினி ரசிகர்கள் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பிலும், ரஜினி ரசிகர்கள் சார்பிலும் மதுரைகாவல்துறையிலும், தேர்தல் ஆணையத்திலும் புகார்கள் கொடுக்கப்பட்டன.
காவல்துறையினரின் அனுமதியில்லாமல் கறுப்புக் கொடி காட்டிய ரசிகர்களைக் கைது செய்ய வேண்டும், ரசிகர்கள்மீது நடவடிக்கை எடுக்காமல் பா.ம.கவினரை மட்டும் கைது செய்த மதுரை மாநகர காவல்துறை ஆணையர்விஜயக்குமாரை மாற்ற வேண்டும் என ஜனநாயக முற்போக்குக் கூட்டணி கோரிக்கை வைத்தது.
இதை ஏற்ற தேர்தல் ஆணையம், விஜய்குமாரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. அதே போலஅனுமதியில்லாமல் கறுப்புக் கொடி காட்டிய ரஜினி ரசிகர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்குஆணையம் உத்தரவிட்டது. இதனால் ரஜினி ரசிகர்களும் கைதாயினர்.
அதே நேரத்தில் ரஜினி ரசிகர்களின் கோரிக்கையான ராமதாஸைக் கைது செய்யுமாறு கோரியது குறித்து தேர்தல்ஆணையம் இதுவரை முடிவு ஏதும் எடுக்கவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்துள்ள ரஜினிகாந்த் தலைமை தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தியை நேரில் சந்தித்துபுகார் கொடுக்க முடிவு செய்துள்ளார். ரிஷிகேஷ் சென்றுள்ள அவர் தற்போது டெல்லி வந்துள்ளார்.
இன்று தலைமைத் தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து ராமதாஸைக் கைது செய்து நடவடிக்கை எடுக்கஉத்தரவிடுமாறு அவர் புகார் கொடுக்கவுள்ளார். அதன் பிறகு சென்னை திரும்பி வந்து நிருபர்களை சந்திக்கக் கூடும்என்று தெரிகிறது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா











Click it and Unblock the Notifications