கருத்து கணிப்புகளால் கவலை இல்லை: பா.ஜ.க.
சென்னை & பாண்டிச்சேரி:
கருத்துக் கணிப்பு முடிவுகளைக் கண்டு பா.ஜ.க. கவலைப்படவில்லை என்று தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர்குமாரவேலு கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கருத்துக் கணிப்பு முடிவுகளை பா.ஜ.க. எப்போது பெரிதாகஎடுத்துக் கொண்டதில்லை. சாதகமாக இருந்தபோதும் சரி, பாதகமாக வந்தபோதும் சரி இதுகுறித்து நாங்கள்கவலைப்பட்டதில்லை.
காங்கிரஸ் கூட்டணிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. யார் பிரதமர் என்பதை அவர்களால் கூற முடியவில்லை.ஆனால் பா.ஜ.க. கூட்டணி மிகத் தெளிவாக உள்ளது. சாதனைகளைக் கூறி நாங்கள் வாக்கு கேட்கிறோம்.
பா.ஜ.க. கூட்டணிக்கு நடிகர் டி.ராஜேந்தர் ஆதரவு தெரிவித்துள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றார் அவர்.
பொடா கடுமையாகும்: இல.கணேசன்
பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொடா சட்டம் இன்னும் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று பாரதீயஜனதாக் கட்சியின் அகில இந்திய செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
பாண்டிச்சேரியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்தியாவின் பாதுகாப்புக்கு தீவிரவாதிகளால்தொடர்ந்து அச்சம் இருந்து வருகிறது. பொடா சட்டத்தின் மூலம் இது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இருப்பினும் இன்னும் தீவிரவாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பா.ஜ.க. மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் பொடா சட்டத்தை மேலும் கடுமையாக்கி தொடர்ந்து அதைதீவிரமாக அமல்படுத்தும்.
கம்யூனிசத்தை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதி பேசி வருகிறார். கம்யூனிசம் பிறந்த நாடுகளிலேயே அதுஇப்போது இல்லை. இந்தியாவில் மட்டும் எதற்கு கம்யூனிசம் தேவை? இங்கு இருப்பவர்கள் போலிகம்யூனிசவாதிகள்.
கட்சிகள் அணி மாறுவது சாதாரண விஷயம்தான். ஆனால் பா.ம.கவைப் போல எந்தக் கட்சியும் அடிக்கடிஅணிகளை மாற்றியிருக்காது. அந்த வகையில் வரலாற்றுச் சாதனையே படைத்துள்ளது பா.ம.க. என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications