தாய்லாந்து: போலீஸ்- தீவிரவாதிகள் மோதல்; 112 பேர் பலி
பாங்காக்:
தாய்லாந்தில் இன்று காலை பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில்107 தீவிரவாதிகளும், 5 பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டனர். மேலும் 15 போலீஸார் காயமடைந்தனர்.
அப்போது போலீஸ் தரப்புக்கும், தீவிரவாதிகளுக்கும் நடந்த மோதல்களில் குறைந்து 107 தீவிரவாதிகளும், 3போலீஸாரும், 2 பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டனர். 15 போலீஸார் காயமடைந்தனர். 15க்கும்மேற்பட்ட இடங்களில் இத்தகைய மோதல் நடந்தது.
தாக்குதலுக்குப் பின் தேடுதல் வேட்டை நடத்திய பாதுகாப்புப் படையினர், ஒரு மசூதியில் பதுங்கியிருந்த 32தீவிரவாதிகளைத் தேடிப் பிடித்து சுட்டுக் கொன்றனர். 17 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் பெரும்பாலோனோர் 15 வயது முதல் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்ஆவர். போலீஸாரின் ஆயதங்களைக் கொள்ளைடிக்கும் பொருட்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்,தாக்குதல் பற்றி முன்கூட்டியே ரகசிய தகவல் கிடைத்திருந்தால், போலீஸார் உஷார் நிலையில் இருந்ததாகவும் உயர்போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
இது குறித்து தாய்லாந்து பிரதமர் தக்ஷின் சைனவத்ரா கூறுகையில், தீவிரவாதிகளில் பெரும்பாலோனோர்கோடாரியும், சிலர் மட்டும் துப்பாக்கி வைத்தும் தாக்குதலில் ஈடுபட்டதால் போலீஸ் தரப்பில் குறைவாக உயிர்ச்சேதம் மட்டும் ஏற்பட்டது என்றார்.
கடந்த ஜனவரி முதல் தெற்கு தாய்லாந்தில் தீவிரவாதிகள் மோதல் நடந்து வந்திருந்தாலும், இது தான் மோசமானதாக்குதலாகும். இந்தத் தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
-
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு











Click it and Unblock the Notifications