சேலம்: அனைத்து கட்சி கூட்டத்தில் ஜ.மு.கூ. வெளிநடப்பு
சேலம்:
சேலம் மாவட்ட ஆட்சியர் சேது.ராமச்சந்திரன் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் இருந்து,போலீசாரின் பாரபட்சமான நடவடிக்கைகளைக் கண்டித்து ஜனநாயக முற்போக்குக் கூட்டணி கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் சேலம் தொகுதி தேர்தல்பார்வையாளர்கள் பிரகாஷ் கராண்டோ மற்றும் அதிமுக, திமுக, பாமக, மதிமுக, பா.ஜ.க., காங்கிரஸ் உள்படஅனைத்து கட்சி பிரமுகர்களும் கலந்து கொண் டனர்.
கூட்டத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சியினர் போலீசார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைதெரிவித்தனர். இதற்கு அதிகாரிகள் அளித்த பதில் அவர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை.
இதனையடுத்து சேலம் மாநகர திமுக செயலாளர் சுபாஸ், கார்த்தி எம்.எல்.ஏ. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள்கூட்டத்தில் இருந்து வெளி நடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுபாஸ் கூறியதாவது:
தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வாழப்பாடியில் பிரசாரம் செய்யப் போவதாக 4 நாட்களுக்கு முன்னர்போலீஸாரிடம் அனுமதி பெற்று இருந்தோம். ஆனால் போலீஸார் பிரசாரம் நடைபெறும் இடத்தில் கொடி மற்றும்பேனர்களை அகற்றி உள்ளனர். இதே போல் காரிப்பட்டி, ராமலிங்கபுரத்திலும் போலீசார் பாரபட்சமாக நடந்துஉள்ளனர் என்று கூறினார்.
இது குறித்து அதிமுக எம்.எல்.ஏ வெங்கடாசலம் கூறியதாவது:-
தோல்வி பயத்தில் திமுக கூட்டணி கட்சியினர் வெளிநடப்பு செய்து உள்ளனர். சொல்ல வேண்டிய கருத்தை தேர்தல்பார்வையாளர்களிடம் கூறி தீர்வு காண்பதற்கு பதிலாக அரசியல் கட்சி கூட்டம் போல் வெளிநடப்பு செய்துள்ளனர்என்றார்.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications