ஊழல் வழக்கில் இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணன் விடுதலை
சென்னை:
ரூ. 23.10 லட்சம் ஊழல் வழக்கில் இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரானஎம்.கோபாலகிருஷ்ணன், தரகர் ஜெயச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்து சென்னை தனி நீதிமன்றம் தீர்ப்புவழங்கியுள்ளது.
இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநராகவும், தலைவராகவும் இருந்தவர் கோபாலகிருஷ்ணன். குறுகிய காலத்தில்தமிழகம் முழுக்கத் தெரிந்த நபராக மாறினார். தொலைக்காட்சியில் இவரது முகம் தெரியாத நாளே இல்லை எனும்அளவுக்கு எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அதில் இவர் இடம் பெறுவார்.
முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் நடத்தும் மக்கள் தமிழ் தேசம் கட்சியிலும் சில காலம் இருந்தார், தேர்தலில்போட்டியிட்டுத் தோல்வியையும் தழுவினார். திரைத்துறையினருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இவர் ஏராளமானகடன் கொடுத்ததால் இந்தியன் வங்கியே திவால் ஆகும் நிலைக்குத் தள்ளப்பட்டதாக புகார் எழுந்தது.
இந் நிலையில் சிபிஐ அதிகாரிகள் கோபாலகிருஷ்ணன் மீதும், ஜெயச்சந்திரன் என்ற தரகர் மீதும் வழக்குப் பதிவுசெய்தனர்.
அதில், கடந்த 1990ம் ஆண்டு முதல் 91ம் ஆண்டு வரை கோபாலகிருஷ்ணனும், ஜெயச்சந்திரனும், சென்னைஉள்ளிட்ட சில நகரங்களில் சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபட்டிருந்தனர். அவர்களது நடவடிக்கையால்இந்தியன் வங்கிக்கு ரூ. 23.10 லட்சம் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது என்று புகாரில் சிபிஐ தெரிவித்திருந்தது.
வழக்கை சிபிஐ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. நேற்று இதில் தீர்ப்பு வழங்கப்பட்டது.நீதிபதி ராமசாமி தனது தீர்ப்பில்,
குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் முழுமையாக பரிசீலித்துப் பார்த்தபோது, அரசுத்தரப்பு தனது குற்றச்சாட்டை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கவில்லை என்று தெரிகிறது.
இருவரும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான நேரடியான ஆதாரம் எதுவும் இல்லை. வங்கிதொடர்பான முடிவுகளை எடுத்தபோதெல்லாம், வங்கியின் உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசியேகோபாலகிருஷ்ணன் மேற்கொண்டுள்ளார். மேலும் ஜெயச்சந்திரன் சட்டவிரோதமான தரகர் அல்ல,அங்கீகக்கப்பட்ட தரகர்தான்.
தவறு நடந்திருப்பதாக தெரிந்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைதான் எடுத்திருக்கவேண்டும். வழக்குத் தொடர்ந்திருக்கத் தேவையில்லை என்று நீதிபதி தெரிவித்தார்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு











Click it and Unblock the Notifications