வைகோ: பொடா மறு ஆய்வுக் குழுவின் பரிந்துரையை ஏற்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
வைகோ மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு பொடா மறு ஆய்வுக் குழுஉத்தரவிட்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
இதனால் வைகோ உள்ளிட்ட 9 மதிமுகவினர் மீது போட்ட பொடா வழக்குகளை வாபஸ் பெறவேண்டிய நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக பொடா மறு ஆய்வுக் குழுவின் பரிந்துரை மத்திய, மாநில அரசுகளை மட்டுமேகட்டுப்படுத்தும் என்றும், இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில்இருப்பதால் அதை வாபஸ் பெற வேண்டியது இல்லை என்றும் தமிழக அரசு கூறியது.
இதனால் பொடா மறு ஆய்வுக் குழுவின் பரிந்துரையை ஏற்க மறுத்த தமிழக அரசு, வழக்கை வாபஸ்பெற முடியாது என்று கூறியது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வைகோ மனு தாக்கல் செய்தார். அதில், மறு ஆய்வுக்குழுவின் பரிந்துரையை ஏற்று தன் மீதான வழக்கை வாபஸ் பெறுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என வைகோ கோரியிருந்தார்.
அதே போல தமிழக அரசின் சார்பிலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பொடா மறுஆய்வுக் குழுவின் பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த இரு மனுக்களையும் விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி சிர்புர்கர் ஆகியோர்அடங்கிய டிவிஷன் பெஞ்ச், வைகோவின் கோரிக்கையை ஏற்றது.
பொடா மறு ஆய்வுக் குழுவின் பரிந்துரை மாநில அரசைக் கட்டுப்படுத்தும் என நீதிபதிகள் தங்களதுதீர்ப்பில் கூறினர். தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications