பாலகங்காவின் வழக்குகள் வாபஸ்: தேர்தல் ஆணையத்திடம் அரசு விளக்கம்
டெல்லி:
மத்திய சென்னை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பாலகங்கா மீதான வழக்குகளை வாபஸ் பெற்றதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு தமிழக அரசு அறிக்கை அனுப்பியுள்ளது. .
பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் தண்டனை வழங்கியபோது,கலவரத்தில் ஈடுபட்டு பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக பாலகங்கா, முன்னாள் எம்.பி. காளியப்பன்,மதுசூதனன் உள்ளிட்ட 66 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதற்கு முன்னரும் பாலகங்கா மீது பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்த இன்னொரு வழக்கும் திருவல்லிக்கேணிகாவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந் நிலையில் பாலகங்கா மீதான வழக்குகளை வாபஸ் பெற தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதனையடுத்துஆளுங்கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகச் செயல்பட்டு, அவர் மீதான கிரிமினல் வழக்குகளை வாபஸ் பெறஆணை பிறப்பித்த தமிழக உள்துறைச் செயலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல்ஆணையருக்கு திமுக பொருளாளர் ஆர்க்காடு வீராசாமி புகார் மனு அனுப்பினார்.
இந்தப் புகார் தொடர்பாக பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி,பாலகங்கா மீதான வழக்குகள் விவரம், அவை வாபஸ் பெறப்பட்டதன் காரணங்கள் உள்ளிட்ட தகவல்கள்அடங்கிய அறிக்கையை தமிழக அரசு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளது.
இந்த அறிக்கை மீது தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்தவுள்ளது.
தேர்தல் ஆணையர் நாளை தமிழகம் வருகை:
இந் நிலையில், தமிழக தேர்தல் ஏற்பாடுகளைப் பார்வையிட மத்திய தேர்தல் ஆணையர் டாண்டன் நாளை சென்னை வருகிறார்.
நாளை சென்னைத் தலைமைச் செயலகத்தில் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி மற்றும் உயர் அதிகாரிகளுடன்டாண்டன் ஆலோசனை நடத்துகிறார். தேர்தல் ஏற்பாடுகளைப் பார்வையிட்டு, உரிய ஆலோசனைகளை வழங்குகிறார்.
வீரப்பன் பகுதிகள்:
இதற்கிடையே சந்தன மரக் கடத்தல் வீரப்பன் நடமாடும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் ஏற்பாடுகளை தருமபுரிமக்களவைத் தொகுதி முதன்மை தேர்தல் பார்வையாளர் விமலேந்திரசரன் பார்வையிட்டார்.
வீரப்பன் நடமாட்டம் இருக்கும் கருங்கல்லூர், காவேரிபுரம், கத்திரிப்பட்டி, பெருமாள் கோவில் நத்தம், சின்னதண்டா, செட்டிபட்டிஆகிய பகுதிகளில் வசிக்கும் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவாஎன்பதை தேர்தல் பார்வையாளர் நேரில் ஆய்வு செய்தார்.
-
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications