நீதிமன்ற வளாகத்திற்குள் கிடா வெட்டிய வழக்கறிஞர்கள்
சேலம்:
சேலம் நீதிமன்ற வளாகத்தில் ஆடு வெட்டி பொங்கல் வைத்து சில வழக்கறிஞர்கள் விழா நடத்தியதால், பெரும்சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் கண்ணானகுறிச்சி என்ற இடத்தில் மாங்கொல்லை ஒன்று உள்ளது. இங்கு வருடந்தோறும்வழக்கறிஞர்கள் ஒன்று கூடி ஆடு, கிடா வெட்டி பூஜை செய்து, பொங்கலிட்டு படையல் வைப்பது வழக்கம்.அதேபோல, இந்த ஆண்டும் விருந்துக்கு ஏற்பாடு செய்ய முயன்றுள்ளனர்.
ஆனால் மாங்காய்கள் பழுக்கத் தொடங்கியிருப்பதால் அங்கு விழா நடத்தக் கூடாது என்று ஆட்சேபனை எழுந்தது,இறுதியில் ஆடு வெட்டுக்குத் தடை விதிக்கப்பட்டது.
என்ன செய்வது என்று யோசித்த வழக்கறிஞர்கள் ஆண்டு தோறும் நடக்கும் பழக்கத்தை விட முடியாது என்பதால்,மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் விழாவை நடத்தலாம் என்று முடிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர்கள் சங்க அலுவலகத்திற்கு அருகே கிடா வெட்டைநடத்தியுள்ளனர். பின்னர் விருந்து நிகழ்ச்சியும் நடந்துள்ளது. இது வழக்கறிஞர்களிடையே சலசலப்பைஏற்படுத்தியுள்ளது. இந்த விருந்து நிகழ்ச்சியை எதிர்க்கும் வழக்கறிஞர்கள் சிலர், மாவட்ட நீதிபதியிடம் இதுகுறித்துப் புகார் கொடுத்துள்ளனர்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications