கருத்து கணிப்புகள் பொய்: ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

கருத்துக் கணிப்புகளை நான் ஒருபோதும் நம்புவதில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அதிமுக - பா.ஜ.க வேட்பாளர்களுக்காக தமிழகம் முழுவதும் தீவிரப் பிரசாரத்தில் இருக்கும் ஜெயலலிதா நெல்லை,திருச்செந்தூர், நாகர்கோவில் தொகுதிகளில் வாக்கு சேகரித்து வருகிறார்.

கன்னியாகுமரி செல்லும் வழியில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்,

இப்போது நம் முன் உள்ள முக்கிய கேள்வி இந்தியர் ஒருவர் நாட்டை ஆள வேண்டுமா? அல்லது வெளிநாட்டில்பிறந்தவர் நாட்டை ஆள வேண்டுமா? என்பதுதான்.

வெளிநாட்டில் பிறந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்தியாவின் பிரதமராக வரக்கூடாது என்பதுதான்இந்த தேர்தலில் முக்கிய பிரச்சினையாகும். இதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

கருத்து கணிப்பு முடிவுகள் பற்றி நான் கவலைப்படவில்லை. கருத்து கணிப்புகள் தவறானவை என்பதை நான் பலதடவை நிரூபித்துக் காட்டி இருக்கிறேன். இந்த தடவை மீண்டும் அதை நான் நிரூபித்துக் காட்டுவேன்.

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றார் ஜெயலலிதா.

முன்னதாக நெல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

5 ஆண்டுகள் மத்தியில் பதவி சுகத்தை பெற்றபின் கொள்கை பிரச்சினை காரணமாக வெளியேறியதாக திமுகதலைவர் கருணாநிதி கூறுகிறார். 5 ஆண்டுகள் முடியும் நேரத்தில்தான் அயோத்தி பிரச்சனை தலையெடுக்கஆரம்பித்தது என்பதை திருவாளர் கருணாநிதி கண்டுபிடித்தாரா?

தான் நினைத்தது நடக்காவிட்டால்தான், தான் திராவிடர் என்பதும், பா.ஜ.க. மதவெறி கட்சி என்பதும்கருணாநிதியின் ஞானக்கண்களுக்கு தெரிய ஆரம்பித்துவிடும்.

எனது ஆட்சியை கலைக்க சொன்னார் கருணாநிதி. பா.ஜ.க. அதை செய்யவில்லை. இதனால்தானே வெளியேவந்தார். இதை வெளிப்படையாகச் சொல்லிவிட்டு போகவேண்டியதுதானே, இதற்கு ஏன் இத்தனை கபடநாடகங்கள்?

திட்டமிட்டு ஒவ்வொரு காயையும் நகர்த்திவிட்டு இப்போது, பா.ஜ.க மதவாதக் கட்சி என்று தெரிந்துவெளியேறிவிட்டதாக கூறுகிறார் கருணாநிதி. இந்த பொய்யை யார் நம்புவார்கள்? என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+