ஜெயலலிதாவுக்காக நடுரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட கருணாநிதி
திருநெல்வேலி:
முதல்வர் ஜெயலலிதாவின் கார் போவதற்காக திமுக தலைவர் கருணாநிதியின் வேனை போலீஸார் தடுத்துநிறுத்தினர். இதனால் வேனுக்குள்ளேயே சுமார் முக்கால் மணி நேரம் கருணாநிதி காத்திருக்க நேர்ந்ததால்திருநெல்வேலியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்செந்தூரில் பிரசாரம் செய்த திமுக தலைவர் கருணாநிதி பின்னர் தாழையூத்தில் உள்ள விருந்தினர் விடுதியில்தங்குவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது பாளையங்கோட்டை நோக்கி ஜெயலலிதா காரில் வந்துகொண்டிருந்தார்.
அவரது கார் வண்ணாரப்பேட்டை அருகே உள்ள மேம்பாலத்தில் சென்றபோது திடீரென்று வண்டியை நிறுத்திபேசத் தொடங்கினார் ஜெயலலிதா. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் பை பாஸ் சாலையில் வந்து கொண்டிருந்த கருணாநிதியின் பிரசார வேனும், திமுகவினரின்வாகனங்களும் மேற்கொண்டு போக முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டன.
ஜெயலலிதா போன பிறகே வாகனங்களை அனுப்ப முடியும் என்று போலீஸார் கூறியதால், கருணாநிதிவேனுக்குள்ளேயே அமர வேண்டியதாயிற்று. சுமார் முக்கால் மணி நேரத்திற்குப் பிறகு ஜெயலலிதாவின் பிரசாரம்முடிந்த பின்னரே கருணாநிதியின் வேன் புறப்பட முடிந்தது.
நடுரோட்டில் வேனுக்குள்ளேயே கருணாநிதி சுமார் முக்கால் மணி நேரம் காத்திருந்ததால், அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications