வைகோ மீதான விசாரணையை நிறுத்தி வைக்க பொடா நீதிமன்றம் மறுப்பு
சென்னை & தஞ்சாவூர்:
தன் மீதான வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்ற வைகோவின் கோரிக்கையைபொடா சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
பொடா மறு ஆய்வுக் குழுவின் பரிந்துரைப்படி தன் மீதான வழக்கை தமிழக அரசு வாபஸ் பெறவேண்டும் என்றும், அதுவரை விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் சிறப்புநீதிமன்றத்தில் வைகோ மனு தாக்கல் செய்திருந்தார்.
இந் நிலையில் மறு ஆய்வுக் குழுவின் பரிந்துரையை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொடா மறு ஆய்வுக் குழுவின்பரிந்துரை தமிழக அரசைக் கட்டுப்படுத்தும் என்று தீர்ப்பளித்தனர்.
நீதிபதிகள் சுபாஷன் ரெட்டி, சிர்புர்கர் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், பொடா மறு ஆய்வுக் குழு,தான் எடுத்த முடிவை சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு தெரிவித்தவுடன், மாநில அரசு தனதுவழக்கறிஞரை அழைத்து வழக்கை வாபஸ் பெறுவது குறித்து அறிவுறுத்தலாம்.
அத்தோடு மாநில அரசின் பொறுப்பும், பொடா மறு ஆய்வுக் குழுவின் பொறுப்பும் முடிந்துவிடும்.
அதற்குப் பின் அரசு வழக்கறிஞர், வழக்கை வாபஸ் பெறுவது குறித்து, சுதந்திரமாக சிந்தித்துமுடிவெடித்து, வழக்கை வாபஸ் பெற மனு தாக்கல் செய்யலாம்.
வைகோவின் வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் வழக்கறிஞர்முடிவெடுக்கலாம். (தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசுவது பொடா சட்டத்தின் கீழ்தண்டனைக்குரிய குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது நினைவுகூறத்தக்கது)
அரசு வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தவுடன் பொடா நீதிமன்றம் இயந்திரமாக செயல்பட்டுவழக்கை கைவிட வேண்டிய அவசியம் இல்லை. உண்மை நிலையை ஆராய்ந்து, அரசியல் சட்டநுணுக்கங்களின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு நேற்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறினர்.
இந் நிலையில் வழக்கை வாபஸ் பெறுமாறு அரசு வழக்கறிஞருக்கு தமிழக அரசு கடிதம் எழுதும்வரை தன் மீதான பொடா வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரி பூந்தமல்லிபொடா நீதிமன்றத்தில் வைகோ சார்பில் இன்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து அரசு வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார். அதில், எனக்கு அரசு கடிதம் எழுதும்வரை வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத் தீர்ப்பில்கூறப்படவில்லை என்று அரசு வழக்கறிஞர் சுட்டிக் காட்டியிருந்தார்.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி ராஜேந்திரன், வைகோவின் மனுவை தள்ளுபடி செய்தார்.
உயர் நீதிமன்ற உத்தரவு: வைகோ மகிழ்ச்சி
முன்னதாக, பொடா மறு ஆய்வுக் கமிட்டியின் பரிந்துரைக்கு தமிழக அரசு கட்டுப்பட வேண்டும்என்ற உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மகிழ்ச்சிதெரிவித்தார்.
தஞ்சாவூரில் பிரச்சாரத்தில் உள்ள வைகோ கூறுகையில்,
நீதி வெல்லும் என்பதில் எனக்கு எப்போதும் நம்பிக்கையுண்டு. நீதிமன்றங்கள் மீது எனக்குஎப்போதும் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கை பொய்க்கவில்லை என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications