ஜெவுக்கு கருணாநிதி சவால்
கமுதி:
பா.ஜ.கவைப் பற்றிய ரகசியங்களைச் சொல்வேன் என்று கூறிய முதல்வர் ஜெயலலிதா அந்த ரகசியங்களைவெளியிட்டால் 6 மாதத்திற்கு அரசியலிலிருந்து விலத் தயார் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட கமுதி நகரில் கருணாநிதி பிரசாரம் செய்தார். அப்போது, பா.ஜ.கவைப் பற்றியும்,பா.ஜ.க. தலைவர்களைப் பற்றியும் பல பயங்கர உண்மைகளை பத்திரிக்கைகள் மூலம் விரைவில் வெளியிடுவேன்என்று முன்பு ஜெயலலிதா முழங்கினார்.
ஆனால் இப்போது அதுகுறித்து அவர் வாயே திறப்பதில்லை. அவருக்கு நான் சவால் விடுக்கிறேன். பா.ஜ.க.ரகசியங்களை பத்திரிக்கைகளில் பகிரங்கமாக வெளியிட அவர் தயாரா? அப்படிச் செய்தால் நான் 6 மாதத்திற்குஅரசியலில் ஈடுபட மாட்டேன், ஜெயலலிதா இதற்குத் தயாரா?
இதை செய்ய ஜெயலலிதா தவறினால், குறைந்தபட்சம், வாய் தவறி அப்படிச் சொல்லி விட்டேன் என்றாவது கூறஜெயலலிதா தயாரா?
சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் ஜெயலலிதா அரசுக்கு எதிராக கை கோர்த்து நிற்கிறார்கள். தங்களது தீர்ப்பைமே 10ம் தேதி எழுதவுள்ளார்கள். மக்களின் பிரச்சினைகளை உணர்ந்துள்ள கூட்டணி ஜனநாயக முற்போக்குக்கூட்டணி என்பது மக்களுக்குத் தெரியும் என்றார் அவர்.
இன்று மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில், கருணாநிதியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்அகில இந்திய பொதுச் செயலாளர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித்தும் பேசுகிறார்கள்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications