தர்மபுரி அருகே வேன்-லாரி மோதல்; 4 பேர் பலி
தர்மபுரி:
தர்மபுரி அருகே இன்று அதிகாலை நடந்த லாரி - வேன் மோதலில் 4 பேர் இறந்தனர். மேலும் 15 பேர் படுகாயம்அடைந்தனர்.
பெங்களூர் அருகே உள்ள குமாரசாமி லே அவுட் பகுதியைச் சேர்ந்த பசவராஜ் (38), இவரது நண்பர் நாகராஜ் (42)ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் கன்னியாகுமாரி சுற்றுலா செல்ல முடிவு செய்தனர்.
இன்று அதிகாலையில் தர்மபுரி அருகே இவர்கள் வந்தபோது, திருப்பூரில் இருந்து பனியன் ஏற்றி வந்த லாரியுடன்வேன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் கலசம்மாள் (34), புருத்தாயம்மாள் (40), சிக்கம்மாள் (வயது40),லாரி கிளீனர் குமார் (24) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் 15 பேர்படுகாயமடைந்தனர்.
இவர்கள்அனைவரும் தர்மபுரி மற்றும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து தெரிய வந்ததும் மாவட்ட கலெக்டர் சித்திக், எஸ்.பி.பெரியய்யா ஆகியோர் சம்பவ இடத்திற்குசென்று மீட்பு பணியை முடுக்கி விட்டனர். பின்னர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும்ஆறுதல் கூறினர்.
தர்மபுரி போலீஸார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications