பிரசாரத்தில் மோதல்: திமுக கூட்டணியினருக்கு அரிவாள் வெட்டு; எஸ்.எஸ்.சந்திரன் மீது கொலை முயற்சி வழக்கு
சேலம்:
சேலத்தில் நடிகர் எஸ்.எஸ்.சந்திரனின் தேர்தல் பிரசாரத்தில் தகராறு ஏற்பட்டது. இதில் திமுக, காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த 4 பேர் அரிவாளால் வெட்டப்பட்டனர்.
சேலம் கன்னங்குறிச்சி சந்தைப்பேட்டையில் அதிமுகவுக்கு ஆதரவாக எஸ்.எஸ்.சந்திரன் ஒரு ஜீப்பில் நின்றவாறுபேசினார்.
அப்போது அவர் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, திமுக தலைவைர் கருணாநிதி உள்ளிட்ட எதிர்கட்சித்தலைவர்களை கடுமையாக விமர்சித்துப் பேசினார். கருணாநிதியை ஒற்றைக்கண் சிவராஜன் என்று கூறினார்.
இதற்கு அப்பகுதியிலுள்ள ஜனநாயக முற்போக்குக் கூட்டணியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்துஇருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
இதில் காங்கிரஸ் கட்சியின் கன்னங்குறிச்சி பேரூராட்சி வார்டு உறுப்பினருமான பக்தவத்சலம் (44), திமுக-பிரமுகர்கள் குபேந்திரன் (25), ஐயப்பன் (29), முனியப்பன் (35) ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்டனர்.
இவர்கள் 4 பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் குபேந்திரன் நிலை கவலைக்கிடமாகஉள்ளது.
தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும். கன்னங்குறிச்சியை சேர்ந்த ஏராளமானவர்கள் அங்கு திரண்டு வந்தனர்.கூட்டத்தை பார்த்ததும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதில் ஒரு கும்பல் எஸ்.எஸ்.சந்திரன்காரின் பின்பக்க கண்ணாடி உடைத்தது.
காரைத் தாக்கிய கும்பல் கூட்டத்துக்கு வந்திருந்த மற்றொரு காரை பிடித்து, கன்னங்குற்றிச்சி போலீசில்ஒப்படைத்தது. அந்தக் காரில் வீச்சரிவாள் உருட்டுக் கட்டைகள், கத்தி போன்ற ஆயுதங்கள் இருந்தததைபோலீஸார் கண்டு பிடித்தனர்.
இந்த சம்பவம் குறித்து அமைச்சர் செம்மலை, நடிகர் எஸ்.எஸ்.சந்திரன், எம்.எல்.ஏக்கள் வெங்கடாசலம், செல்வம்,முருகேசன் ஆகியோர் சேலம் மாநகர போலீஸ் கமிஷ்னர் சுனில்குமாரிடம் புகார் தெரிவித்தனர். அதே போல்திமுகவினரும் போலீசில் புகார் செய்தனர்.
இதனையடுத்து, எஸ்.எஸ்.சந்திரன் உள்ளிட்ட 11 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications